ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. பல்லகெலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது.
2–வது டெஸ்ட் வருகிற 4–ந்தேதி காலேயில் தொடங்குகிறது. இதற்கிடையே இலங்கைக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஆல்–ரவுண்டர் 27 வயதான கிளைன் மேக்ஸ்வெல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவரது பேட்டிங் சீராக இல்லை என்பதால் நீக்கப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலிய தேர்வு குழு கூறியுள்ளது.
ஆஸ்திரேலிய ஒரு நாள் போட்டி அணி வருமாறு:–
ஸ்டீவன் சுமித் (கேப்டன்), டேவிட் வார்னர், ஜார்ஜ் பெய்லி, நாதன் கவுல்டர் நிலே, ஜேம்ஸ் பவுல்க்னெர், ஆரோன் பிஞ்ச், ஹேசில்வுட், ஹென்ரிக்ஸ், உஸ்மான் கவாஜா, மிட்செல் மார்ஷ், ஷான் மார்ஷ், நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க், மேத்யூ வேட், ஆடம் ஜம்பா.