இந்தியன் சூப்பர் லீக் தொடரில் கலக்கவிருக்கும் சச்சினின்

இந்தியன் சூப்பர் லீக் தொடரில் கலக்கவிருக்கும் சச்சினின் ‘கேரளா பிளாஸ்டர்ஸ்’ அணியின் லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் வரும் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடக்கவுள்ளது. இதில் சென்னை, மும்பை, கேரளா, கோல்கட்டா உள்பட 8 அணிகள் பங்கேற்கவுள்ளன.

இதில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கிறார். இந்த அணியின் லோகோ நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த லோகோவானது, கேரள மக்களின் கால்பந்து ஆர்வம், பாரம்பரியம், கலாசாரம், ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. தவிர, கேரளாவின் சின்னமான யானை தனது தும்பிக்கையில், கால்பந்தை பிடித்திருப்பது போல காணப்படுகிறது.

லோகோவை வடிவமைத்த பிராஷ் நிறுவனத்தின் ஜான் பிராஷ் கூறுகையில், உலகின் சிறந்த கால்பந்து கிளப் அணிகள் குறித்து ஆழமாக ஆராய்ந்த பின்னர் இந்த லோகோ வடிவமைக்கப்பட்டது என்று கூறியுள்ளார்

அணியின்அறிமுகம்இந்தியன்கலக்கவிருக்கும்கேரளாசச்சினின்சூப்பர்செய்யப்பட்டுள்ளதுதொடரில்பிளாஸ்டர்ஸ்’லீக்லோகோ
Comments (0)
Add Comment