நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 24 ஓட்டங்களால் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 பந்து பரிமாற்ற நிறைவில் 293 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 268 ஓட்டங்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்தது. விராட் கோலி அதிகபட்சமாக 111 பந்துகளுக்கு 123 ஓட்டங்களைப்பெற்று இந்திய ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார். ஆயினும் இந்திய அணியை தோல்வியில் இருந்து மீட்க முடியவில்லை.