இன்றைய ராசிபலன் மற்றும் இன்றைய ஜாக்பாட் ராசி இதுதான்.

மேஷம்

எடுத்த காரியம் வெற்றியடைய சிறப்பான முயற்சிகளை மேற்கொள்ளும் நாளான இன்று அமையும். வேலை தொடர்பான பயணங்களின் மூலம் தேவையில்லாத அலைச்சல்கள் உண்டாக வாய்ப்புண்டு.

கோபத்தைக் குறைத்துக் கொண்டு, மற்றவர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். தண்ணீர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

இன்று நீங்கள் நீல நிற ஆடை அணிந்தால், நிறைய பிரச்னைகளில் இருந்து தப்பிக்க முடியும். இன்று 9 ஆம் எண்ணும் மேற்கு திசையும் அதிர்ஷ்டம் தருபவையாக இருக்கும்.

ரிஷபம்

புதிய நபர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாகத் தள்ளிப்போய்க் கொண்டிருந்த சில காரியங்களை இன்றைக்கு செய்து முடிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

குழந்தைகளின் அன்பும் ஆதரவும் பெருகும். பணவரவும் சேமிப்பும் இருமடங்காக உயரும். எதிர்காலத் திட்டங்களைத் தீட்டுவீர்கள். வீடு மராமரத்துப் பணிகளுக்கான வேலையைத் துவங்கும் வாய்ப்பு உண்டாகும்.

இன்று உங்களுக்கு வடக்கு திசையும் எண் 2 ம் மஞ்சள் நிறமும் அதிர்ஷ்டம் தருபவையாக இருக்கும்.

மிதுனம்

வீட்டில் உள்ளவர்கள், குறிப்பாக கணவன் மற்றும் மனைவிக்கு இடையே இதுவரை அருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீங்கள் பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.

பிறரால் புகழப்படுவீர்கள். தொழிலில் புது யுக்திகளை முயற்சி செய்து அதில் வெற்றியும் பெறுவீர்கள். சுயதொழிலும் போதுமான அளவு மேம்பாடு அடைவீர்கள்.

இன்று உங்களுக்கு கிழக்கு திசையும் எண் 5 ம், பச்சைநிறமும் அதிர்ஷ்டங்களை அள்ளித் தரும். இன்றைய ஜாக்பாட் ராசிக்காரர்களே நீங்கள் தான்.

கடகம்

உங்கள் உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். அதன்மூலம் ஏராளமான பலன்களைப் பெறுவீர்கள். எடுத்த காரியத்தை மிக சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

அரசு உத்தியோகங்களில் இருப்பவர்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு உங்களுடைய மதிப்பை மற்றவர்கள் மூலம் உயர்த்திக் கொள்வீர்கள். புதிய ஏதேனும் ஒன்றைத் தேடி, ஆராய்ச்சியில் மேற்கொள்வீர்கள்.

இன்று உங்களுக்கு தெற்கு திசையும் எண் 1 ம் சிவப்பு நிறமும் அதிர்ஷ்டத்துக்கு உரியவையாக அமையும்.

சிம்மம்

உத்தியோகஸ்தர்களின் திறமைகள் வெளிப்படும். பெரியோர்களிடம் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும்.

கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும். பயணங்களால் தேவையில்லாத விரயச் செலவுகள் உண்டாகும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை – தெற்கு, அதிஷ்ட எண் – 6, அதிர்ஷ்ட நிறம் – சந்தன வெள்ளை

கன்னி

பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள். உறவினர்களின் வருகையால் நன்மை உண்டாகும்.

விவசாயிகளுக்கு பாசன வசதியால் லாபம் உண்டாகும். கலைஞர்களுக்கு சாதகமான நாள்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை – மேற்கு, அதிஷ்ட எண் – 9, அதிர்ஷ்ட நிறம் – ஆரஞ்சு நிறம்

துலாம்

பூர்விக சொத்துக்களைக் கொண்டு புதிய தொழில்களை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை – வடக்கு, அதிஷ்ட எண் – 3, அதிர்ஷ்ட நிறம் – இளம் மஞ்சள்

விருச்சிகம்

குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். சாதுர்யமான பேச்சுக்களால் தன லாபம் உண்டாகும். நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேன்மையடையும்.

குடும்பத்தில் உள்ள பெரியோர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பணியாளர்கள் பணியில் எச்சரிக்கையுடன் செயல்படவும்.

இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை – கிழக்கு, அதிஷ்ட எண் – 1, அதிர்ஷ்ட நிறம் – அடர் மஞ்சள்

தனுசு

உங்களுடைய திறமையான வாக்குவாதத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். புதிய முயற்சிகளை தைரியத்துடன் செயல்படுத்துவீர்கள். நண்பர்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உங்களுடைய அன்றாட செயல்பாடுகளில் இன்று நிறைய மாற்றங்கள் உண்டாகும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை – தெற்கு, அதிஷ்ட எண் – 1, அதிர்ஷ்ட நிறம் – இளம் ஆரஞ்சு

மகரம்

நண்பர்களின் மூலம் நிரந்தர வருமானத்துக்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொண்டு மனம் நிம்மதியடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை – மேற்கு, அதிஷ்ட எண் – 3, அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள் நிறம்

கும்பம்

சபை தலைவராக வீற்றிருக்கும் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும்.

மனக்கவலைகள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர் பயணங்களில் லாபம் உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை – வடக்கு, அதிஷ்ட எண் – 9, அதிர்ஷ்ட நிறம் – அடர் சிவப்பு

 

மீனம்

உடல் ஆரோக்கியத்தில் அவசியம் கவனம் தேவை. பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். அரசியல் பிரமுகர்கள் அமைதிப்போக்கினை கடைபிடிப்பது நல்லது.

தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் மேன்மை உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளினால் சுப விரயச் செலவுகள் உண்டாகும். அதற்கேற்ப லாபமும் உண்டு.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை – கிழக்கு, அதிஷ்ட எண் – 7, அதிர்ஷ்ட நிறம் – சாம்பல் நிறம்.

அதிர்ஷ்ட திசைஅதிர்ஷ்ட நிறம்அதிஷ்ட எண்ஜாக்பாட் ராசிராசிபலன்
Comments (0)
Add Comment