உலகக்கிண்ண பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க – இலங்கை அணி மோதல்

இலங்கைக்கு எதிரான உலகக்கிண்ண பயிற்சி ஆட்டத்தில் டக்வோர்த் லூயிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய உலகக்கிண்ண பயிற்சி போட்டி கிறிஸ்ட்சர்ஜில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44.4 ஓவர் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 279 ஓட்டங்களை எடுத்தது.

இலங்கை சார்பில் டில்ஷான் 100 ஓட்டங்களையும், மேத்யூஸ் 58 ஓட்டங்களையும் எடுக்க, கருணாரத்ன 46, சங்கக்காரா 31 மற்றும் மென்டீஸ் 15 ஓட்டங்களையும் குவித்தனர்.

பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் கைல் அபொட் 3 விக்கெட்களையும் வேய்ன் பார்னெல் 2 விக்கெட்களையும் பிலான்டர் மற்றும் இம்ரான் தாஹிர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணி 24.3 ஓவர் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் டக்வோர்த் லூயிஸ் முறைப்படி அந்த அணி வெற்றி அணியாக அறிவிக்கப்பட்டது.

துடுப்பாட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் டி கொக் 66 ஓட்டங்களையும் அம்லா 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ள, பிளெஸிஸ் 19, டுமினி 17, ரூஸோ 16 மற்றும் பிலாண்டர் 13 ஓட்டங்களை எடுத்தனர்.

பந்து வீச்சில் ஹேரத் 3 விக்கெட்களையும், மலிங்கா மற்றும் குலசேகர ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

அணிஆட்டம்இலங்கைஉலககிண்ணம்டக்வோர்த் லூயிஸ்தென் ஆப்பிரிக்கபயிற்சிமுறைப்படிவெற்றி
Comments (0)
Add Comment