என்னுடன் இருக்கும் அனைவரும் சிறைக்கு செல்ல நேரிடும்!

மேல் மாகாண சபை உறுப்பினர் ஜகத் குமாரவின் தலவத்துகொட வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக மகிந்த ராஜபக்ச நேற்று அங்கு சென்றிருந்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட சிலரும் முன்னாள் ஜனாதிபதியுடன் சென்றிருந்தனர்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாவது,
என்னுடன் இருக்கும் அனைவரும் இவ்வாறு தாக்கப்படுவார்கள் அல்லது சிறைக்குச் செல்ல நேரிடும் இதுவே நடைமுறை என நான் எண்ணுகின்றேன்.
தற்போது ஊடகங்களையும் தூற்றுகின்றனர். ஊடகங்கள் மகிந்த ராஜபக்சவுடையது என்பது எமக்குத் தெரியும் என கூறுகின்றனர்.
எனினும், தூற்றும் போது ஊடகம் மௌனிக்கின்றது. எனக்கு அவ்வாறே புலப்படுகின்றது. ஊடகங்களையும் உரிமையாளர்களையும் மௌனிக்கச் செய்ய முடியும். எனினும், ஊடகவியலாளர்களை மௌனிக்கச் செய்வது கடினமாகும்.
அனைவரும்இருக்கும்என்னுடன்சிறைக்குசெல்லநேரிடும்
Comments (0)
Add Comment