மேலும் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளின் போது வீசப்படும் அனைத்து ‘நோ ‘பால்களுக்கும் ப்ரீ ஹிட் வழங்கப்படும் என்றும் ஐசிசி-யின் புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வருகிற ஜூலை மாதம் 5-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. பார்படாசில் நடைபெற்ற ஐசிசி உயர்மட்ட கூட்டத்தில் புதிய விதிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கடந்த மே மாதம் மும்பையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய விதிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.