காணாமல்போனோரின் உயிர்களுக்கு 5 லட்சம்? பரணகம நாடகக்குழு

யுத்­தத்­தினால் உற­வு­களை இழந்­துள்ள குடும்­பங்­களை உரிய முறையில் அடை­யாளம் கண்டு அர­சாங்கம் அவர்­க­ளுக்கு ஐந்து இலட்சம் ரூபா­வுக்கும் அதி­க­மான நட்­ட­ஈட்டை ஒரே தட­வையில் வழங்­கி­வி­ட­வேண்டும். இது உட­ன­டி­யாக அர­சாங்கம் மேற்­கொள்­ள­வேண்­டிய செயற்­பா­டாகும் என்று தனது சுய ரூபத்தை மீண்டும் நிரூபித்துள்ளார் காணாமல்போனோர் ஆணைக்­கு­ழு எனக் கூறும் நாடகக்குழு தலைவர் மெக்ஸ்வல் பர­ண­கம. மேலும் அவர் தெரிவிக்கையில்
மேலும் பாதிக்­கப்­பட்ட மக்­களை சந்­தித்­த­ போது நான் இதனை உணர்ந்­து­கொண்டேன். காணாமல் போன­வர்கள் தொடர்பில் எமக்குக் கிடைத்த முறைப்­பா­டு­களின் பிர­காரம் இரா­ணு­வத்­தி­னரை விசா­ரிக்­க­வேண்டிய தேவை எமக்கு காணப்­ப­டு­கின்­றது.
ஆனால் எமக்கு கால அவ­காசம் இல்­லா­மையின் கார­ண­மாக அவ்­வாறு செய்ய முடி­யாமல் உள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார்.
காணாமல் போன­வர்கள் குறித்த விசா­ரணை அமர்­வுகள் மற்றும் அதன் எதிர்­கால செயற்­பா­டுகள் தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.
அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்..
காணாமல் போன­வர்­களை விசா­ரிக்கும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க எமது ஆணைக்­கு­ழு­வுக்கு ஜூலை மாதம் 15ஆம் திக­தி­வரை அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் அதற்குள் எங்­க­ளினால் அனைத்து செயற்­பா­டு­க­ளையும் முடிக்க முடி­யாது.
விசே­ட­மாக காணாமல் போன­வர்கள் தொடர்பில் எமக்குக் கிடைத்த முறைப்­பா­டு­களின் பிர­காரம் இரா­ணு­வத்­தி­னரை விசா­ரிக்­க­வேண்­டிய தேவை எமக்கு காணப்­ப­டு­கின்­றது. ஆனால் எமக்கு கால அவ­காசம் இல்­லா­மையின் கார­ண­மாக அவ்­வாறு செய்ய முடி­யாமல் உள்­ளது.
எனவே நாங்கள் அதனை கைவி­டு­கின்றோம். நாங்கள் யாரையும் குற்­றஞ்­சாட்ட விரும்­ப­வில்லை. ஆனால் விசா­ரணை செய்­ய­வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது. எனினும் அதற்­கான அவ­காசம் இல்­லாமல் இருக்­கின்­றது.
இந்­நி­லையில் நாங்கள் விரைவில் எமது அறிக்­கையை சமர்ப்­பிக்­க­வி­ருக்­கின்றோம். இதே­வேளை நான் காணாமல் போன­வர்­களின் உற­வி­னர்­களை சந்­தித்து பேசி­ய­தி­லி­ருந்து ஒரு விட­யத்தை நன்­றாக புரிந்­து­கொண்டேன்.
அதா­வது பாதிக்­கப்­பட்ட மக்கள் தரப்பில் அர­சாங்கம் முன்­னெ­டுக்­க­வேண்­டிய உட­னடி தேவைகள் சில காணப்­ப­டு­கின்­றன. உதா­ர­ண­மாக பாதிக்­க­ப­பட்ட மற்றும் உற­வு­களை இழந்­துள்ள மக்­களை உட­ன­டி­யாக இனம்­கண்டு அவர்­க­ளுக்கு அர­சாங்கம் ஐந்து இலட்சம் ரூபா­வுக்கும் அதி­க­மான நட்­ட­ஈட்டை ஒரே தட­வையில் வழங்­கி­வி­ட­வேண்டும். இது உட­ன­டி­யாக அர­சாங்கம் மேற்­கொள்­ள­வேண்­டிய செயற்­பா­டாகும். அதா­வது அந்த பணத்தை அவர்கள் உரிய முறையில் தமது வாழ்­வா­தா­ரத்­துக்­காக பயன்­ப­டுத்­து­கின்­ற­னரா என்­ப­த­னையும் பார்க்­க­வேண்டும்.
அடுத்­த­தாக காணாமல் போன­வர்கள் ஒரு­வேளை கிடைப்­பார்கள். அல்­லது கிடைக்­கா­மலும் போகலாம். ஆனால் அவர்­களின் உற­வுகள் காணாமல் போன­வர்­க­ளையே நினைத்­துக்­கொண்டு கவலையில் வாழ்கின்றனர். உனவே அவர்களுக்கு உளவள ஆலோசனைகள் வழங்கப்படவேண்டும்.
அடுத்ததாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வாழ்வாதார உதவிகளை செய்வதற்கு அரசாங்கம் உடனடியாக ஒரு பொறிமுறையை தயார்செய்யவேண்டும் என கூறியுள்ளார்.

இறுதியில் காணாமல் போன படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் உயிர்களுக்கு பணத்தை கொடுத்து மக்களை திசை திருப்ப முயல்கிறார்கள் என்பது இதிலிருந்து வெளிப்படையாகவே தெரிகிறது. இதற்கு ஒரே தீர்வு சர்வதேச நீதிபதிகள் கொண்ட நம்பகமாக விசாரணை மட்டுமே.

காணாமல் போனோர்சர்வதேசன்தமிழர்கள்நீதிபரணகமயுத்தம்
Comments (0)
Add Comment