காணாமல் போனோருக்கு மரண சான்றிதழ் என்பது மிக மோசமான செயல்!

காணாமல் போனோரின் உறவினர்களிடம் காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்துவது மிகவும் மோசமான செயல் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச்சபையில் இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான விவாதம் ஒன்று இடம்பெற்றது.இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில் தாம் சிறிலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டு காணாமல் போனோரின் உறவினர்களை சந்தித்ததாகவும், அவர்களின் பலர் இராணுவத்தினரே தங்களின் உறவினர்களை அழைத்துச் சென்றதாகவும் காணாமல் போனோரின் உறவினர்கள் கூறியதாக  சமந்தா பவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனவர்களுக்காக மரண சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுமாறு அவர்களின் உறவினர்களுக்கு அழுத்தம் கொடுப்பது மிகவும் மோசமான செயல் எனவும் இதற்கு பதிலாக காணாமல் போனமைக்கான சான்றிதழ்களை வழங்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்பதுகாணாமல் போனோருக்குசான்றிதழ்செயல்மரணமிகமோசமான
Comments (0)
Add Comment