கிரிகட் பயிற்சியில் மகன்களை களம் இறக்கியுள்ள டிராவிட்

இந்திய கிரிக்கெட் அணியின் ‘தடுப்பு சுவர்’ என்று வர்ணிக்கப்படும் முன்னாள் வீரர் டிராவிட் தனது இரு மகன்களை கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடுத்தியுள்ளார்.

கடந்த வெள்ளி அன்று மும்பையின் ப்ராபோர்ன் ஸ்டேடியத்தில் டிராவிட்டின் மகன்களான சமித் மற்றும் அன்வய் ஆகிய இருவரும் அசால்ட்டாக டைவ் அடித்து பயிற்சி செய்தது, பல சர்வதேச வீரர்களை திரும்பிப் பார்க்க வைத்தது.

இதில் அவுஸ்திரேலிய வீரர் ’ஸ்டீவ் ஸ்மித்’ இருவருக்கும் சில கிரிக்கெட் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

டிராவிட் தன் 12ம் வயதிலிருந்து கிரிக்கெட் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். ஆனால் சமித் (9), அன்வய் (6) மிகவும் இளவயதிலே கிரிக்கெட் பற்றி கற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

டிராவிட் தற்போது ராஜஸ்தான் றொயல்ஸ் அணிக்கு ஆலோசகராக இருப்பதால், அவருடன் சர்வதேச மைதானங்களை வலம் வந்து எப்போதும் இருவரும் கிரிக்கெட்டையே சுவாசித்து வருகின்றனர்.

அணிஇந்தியாகிரிகட்சுவர்டிராவிட்தடுப்புபயிற்சிமகன்முன்னாள்வர்ணிப்பு
Comments (0)
Add Comment