கொல்கத்தா அணி, பாகிஸ்தானின் லாகூர் அணி மோதல்

ஐ.பி.எல் நடப்பு சம்பியனான கொல்கத்தா அணி, பாகிஸ்தானின் லாகூர் அணியை இன்று எதிர்கொள்கிறது.சம்பியன்ஸ் லீக் போட்டியின் 5வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது.

ஐதராபாத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள ஜஸ்டின் ஆன்டாங் தலைமையிலான கேப் கோப்ராஸ் (தென் ஆப்பிரிக்கா)– டிம்பெய்ன் தலைமையிலான ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் தொடக்க ஆட்டத்தில் தோற்றன. ஹோபர்ட் அணி 5 விக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிடமும், கோப்ராஸ் அணி 33 ஓட்டங்களில் நார்தன் நைட்ஸ் அணியிடமும் தோற்று இருந்தது.

இதனால் இரு அணிகளும் தங்களின் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தும்.மற்றொரு ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்– முகமது ஹபீஸ் தலைமையிலான லாகூர் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன.

கொல்கத்தா அணி தனது முதல் போட்டியில் சென்னை அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் வெற்றியை பெற்றது. அதனால் அதேபோல் ஆதிக்கம் செலுத்தி 2வது வெற்றியை பெற தீவிரம் காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

தகுதிச்சுற்றுப் போட்டியில் அசத்தி பிராத சுற்றுக்கு நுழைந்த லாகூர் அணியும் சிறந்த அணியாக இருப்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.

அணிஅணியைஇன்றுஎதிர்கொள்கிறது.ஐ.பி.எல்.கொல்கத்தாசம்பியனானநடப்புபாகிஸ்தானின்லாகூர்
Comments (0)
Add Comment