இந்திய அணியின் துணை அணித்தலைவர் கோஹ்லியை, அனுஷ்கா திருமணம் செய்ய போகிறார் என்ற செய்திகள் தவறானது என்று அனுஷ்காவின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
இந்திய அணி, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து, இந்த தோல்விகளுக்கு வீரர்கள் தங்கள் மனைவிகளை அழைத்து சென்றது தான் காரணம் என்று செய்திகள் வெளியாகியது.
இதன் தொடர்ச்சியாக இந்திய கிரிக்கெட் வாரியம் இனி வீரர்களுடன் பெண் தோழி அல்லது அவர்களின் மனைவி ஆகியோர் செல்ல அனுமதி அளிக்காது என்ற செய்திகளும் ஊடகங்களில் வெளிவந்தது.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு விராட் கோஹ்லியுடன், அனுஷ்கா சர்மா சென்று தங்க இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்தது என்றும், இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கின்றனர் எனவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.
அதே போல் நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் போதும் கோஹ்லியுடன் அனுஷ்கா சர்மாவைப் பார்த்த தருணத்திலிருந்து இருவர் பற்றியும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இது பற்றி அனுஷ்கா சர்மாவின் பிரதிநிதி கூறுகையில், இணையங்களில் அனுஷ்கா சர்மாவின் திருமணம் பற்றி நிறைய செய்திகள் உலாவருகின்றன.
நான் ஒன்றைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன், இந்தச் செய்திகள் வெறும் வதந்திகளே. ஆகவே இது போன்ற விடயங்களை இனி எழுதவேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.