இணைய தளங்களில் ‘சர்கார்’ ஓப்பனிங் பாடலுக்கு விஜய் நடனமாடும் வீடியோ லீக்கானது.
விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இந்த ஆண்டு தீபாவளி ரிலீசுக்காக மும்முரமாக தயாராகி வரும் திரைப்படம் சர்கார் . இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.
விஜய்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல் படத்தை தொடர்ந்து சர்கார் படமும் உருவாகி வருகிறது.
சர்கார் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விஜய் அதில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்ததால் இந்த விஷயம் ரசிகர்களுக்கு சிறிது அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தாலும் சர்காரை கொண்டாடவே செய்தனர் இளையதளபதி ரசிகர்கள்.
இந்நிலையில் படத்தின் பெருபாலான காட்சிகளின் படப்பிடிப்பை இந்தியாவில் முடித்த கையோடு படத்திற்கான சில காட்சிகளையும், பாடலையும் படம் பிடிக்க படக்குழுவினர் லாஸ் வேகாஸ் சென்றனர்.
நடன இயக்குநர் ஷோபி இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.அ
தில் நடனக் குழுவினருடன் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம், செல்ஃபி போன்றவை சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், ஓப்பனிங் பாடலுக்கு விஜய் நடனமாடும் வீடியோவும் சமூக வலைதளங்களில் லீக்காகி, வைரலாகி வருகிறது. அங்கு வேடிக்கை பார்க்க நின்றிருந்த யாரோ ஒருவர் படப்பிடிப்பை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
நடனக்குழுவுக்குப் பின்னால் இருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டிருப்பதால், விஜய்யின் முகம் தெளிவாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.