சுனில் நரைன் உலக சாதனை

கரேபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்திய வீரர் சுனில் நரைன் உலக சாதனை படைத்தார்.சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளில் கரேபியன் பிரிமியர் லீக் நடந்தது. இதில் ஐந்தாவது போட்டியில் கயானா அமேசன் வாரியஸ் மற்றும் ரெட் ஸ்டீல் அணிகள் மோதின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ரெட் ஸ்டீல் அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 118 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 118 ஓட்டங்கள் எடுக்க, போட்டி ‘டிரா’ஆனது.

இறுதிவரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியானது சமநிலையில் முடிவுற்றதால் ’சூப்பர் ஓவர்’ முறைக்கு தள்ளப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய கயானா அமேசன் வாரியஸ் நிர்ணயிக்கப்பட்ட ஒரு ஓவரில் 11 ஓட்டங்கள் எடுத்தது.

பதிலுக்கு ஒரு ஓவரில் 12 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ரெட் ஸ்டீல் அணியினருக்கு இப்படி ஒரு சோகமான முடிவு கிட்டும் என யாரும் நினைத்து இருக்க மாட்டார்கள். கயானா அமேசன் வாரியஸ் அணியின் சார்பாக பந்துவீச அழைக்கப்பட்டவர் சுழல் மன்னன் சுனில் நரைன். ரெட் ஸ்டீல் அணியின் பூரான் துடுப்பெடுத்தாட சுனில் நரைன் தனது முதல் பந்தை வீசினார்.

முதல் பந்தை அடிக்க முயன்ற பூரான், அந்த பந்தை கோட்டை விட அது கீப்பரிடம் சென்றது. அதே போல் 3 பந்துகள் நழுவ, மட்டையில் பட்டு பாய்ந்த 4வது பந்து பவுண்டரியை நோக்கி செல்ல அது கேட்ச் ஆனது. இதனையடுத்து நகம் கடித்த ரசிகர்கள் உற்சாகத்தில் குதிக்க, மீதமுள்ள 1 பந்தையும் சில உத்திகளை பயன்படுத்தி துடுப்பாட்டக்காரர் தொடாதவாறு வீசினார் சுனில் நரைன்.

இதன் மூலம் ஒரு ஓட்டங்கள் கூட விட்டுக்கொடுக்காமல், ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி, டி20 போட்டியில், அதுவும் சூப்பர் ஓவரில் மெய்டன் (0,0,0,0,W,0) ஓவரை வீசி உலகசாதனை படைத்தார் சுனில் நரைன். இப்படி ஒரு சாதனை நிகழ்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=PetmBve1mlw#t=374″ width=”560″ height=”315″]

உலககரேபியன்கிரிக்கெட்சாதனைசுனில்டி20நரைன்படைத்தார்பிரிமியர்போட்டிகளில்மேற்கிந்தியலீக்வீரர்
Comments (0)
Add Comment