இதில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணிக்கு திரும்பியுள்ளார். 2015-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பைக்குப் பிறகு விளையாடாமல் இருந்த இவர் ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெற்றார். ஆனால் காயம் காரணமாக நாடு திரும்பினார். இந்நிலையில், 100 சதவீத உடற்தகுதி பெறாத நிலையிலும் உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அவர், புவனேஸ்வர் குமார் இடத்தை பிடித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் இந்த இரு தொடர்களிலும் சேர்க்கப்பட்டுள்ளார். மணீஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
தோனி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி விவரம்:-
தோனி (கேப்டன்-விக்கெட் கீப்பர்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, அஜிங்கியா ரகானே, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, ஆஷிஷ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், முகமது ஷமி, பவன் நெகி.