தமிழீழப் பெண்களாய் தலைநிமிர்ந்து வாழ்வோம்.

அனைத்துலக பெண்கள் தினமான இந்த நாளில் எங்கள் வீரப்பெண்களை அவர்களின் வீரதீரங்களை நாம் ஒருகணம் மனதினில் நிறுத்திட வேண்டும்.

அனைத்துலக பெண்கள் தினமான 1992 ம் ஆண்டில் எங்கள்தேசியத் தலைவர் அவர்கள் விடுத்த அறிக்கையில், ‘பெண் விடுதலை எனும் பொழுது அரச ஒடுக்கு முறையிலிருந்தும் பொருளாதார சுரண்டல் முறையிலிருந்தும் பெண்ணினம் விடுதலை பெறுவதையே குறிக்கிறோம்.
எனவே எமது இயக்கம் வடிவமைத்துள்ள பெண் விடுதலைப் போராட்டமானது தேச விடுதலை, சமூக விடுதலை, பொருளாதார விடுதலை என்ற  குறிக்கோள்களை கொண்ட மும்முனை விடுதலைப் போராட்டமாக முன்னெடுக்கப்படுகிறது.

இது ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் அல்ல. இது ஆணாதிக்க அறியாமைக்கு எதிரான கருத்துப் போராட்டம். இந்தச் சிந்தாந்தப் போராட்டம் ஆண்களின் மனவுலக மாற்றத்தைக் குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும்” என்றார்.

எத்தனையோ வீர சாதனைகளை நிகழ்த்திய எங்கள் தமிழீழ பெண்கள் இன்று கட்டுக்கோப்பற்ற வாழ்வியலுக்குள் தள்ளப்பட்டு அவதியுறுகின்றனர். பாரிய பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்கவேண்டியவர்களாய் இருப்பது வேதனைக்குரிய விடயமே.

இன்று சிங்களப்படை பெண்களை படையில் இணைக்கும் செயற்பாட்டை மும்மரமாக செயற்படுத்துகின்றது. காரணம் சிங்கள இனப்பரம்பலை ஏற்படுத்தவே. அத்துடன் எமது பெண்கள் பலம் வாய்ந்த சக்தியாக வாழ்ந்த வரலாறுகள் மறக்கமுடியாதவை. அந்தப் பலத்தை பலவீனப்படுத்த எதிரி மேற்கொள்ளும் தந்திரோபாயம் இது என்பது முக்கியம்.

எதுவாயினும் வரலாற்றை நாங்கள் புரட்டிப்பார்த்தால் பெண்களின் பலம் புரியும். பலத்தோடு இனியும் வாழ்வோம். பலவீனமாகி எதிரியின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்காதிருப்போம். தமிழீழப் பெண்களாய் தலை நிமிர்ந்து வாழ்வோம்.

அனைத்துலக பெண்கள் தினமானதுபெண்களின் பலம்
Comments (0)
Add Comment