நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சண்முக சொர்ண(தங்கம்) சபை கும்பாபிக்ஷேகம்…

ஈழத்தின் மணிமகுடமாம்  யாழ்ப்பாணத்தின் சிகரமாய் விளங்குவது  அலங்காரக்கந்தனாம் நல்லூர் கந்தசுவாமி ஆலயம்.

ஆலயத்தில் தற்பொழுது இந்தவருடத்தின் மகோற்சபம் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமாகி  நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

அதற்கு சிகரம் வைத்தால் போல் நாளை மறுதினம் நல்லூர் கந்தன் ஆலயத்தில் 02-09-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 06.15 மணியளவில்  சண்முகசொர்ண(தங்கம்)சபை கும்பாபிக்ஷேகம் இடம்பெற உள்ளது.

சண்முகசொர்ண(தங்கம்)சபை கும்பாபிக்ஷேகத்திற்கான கிரிஜைகளை, இந்தியா சிதம்பர ஆலய தீட்சிதர்கள் நடத்திவைக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆலயம்கந்தசுவாமிசண்முகசொர்ண(தங்கம்)சபை கும்பாபிக்ஷேகம்சிறப்புநல்லூர்
Comments (0)
Add Comment