பிரித்தானியாவில் நடைபெற்ற தேசத்தின் குரல் பாலசிங்கம் உட்பட மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு!

மார்கழி மாதத்தின் மாவீரர்கள் வணக்க நிகழ்வில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கும் இம்மாதம் தாயக விடுதலைப்போரில் வீரமரணமடைந்த மாவீரர்களுக்கும் சுனாமியின் கோரத்தாண்டவத்தில் மரணித்த மக்கள் மற்றும் ஸ்ரீலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட மக்கள் ஆகியோரை நினைவு கூர்ந்தும் நினைவு வணக்க நிகழ்வு 18/12/2016 ஞாயிறு மாலை 4. 00 மணிக்கு உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர்  மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெருமளவான புலம்பெயர் உறவுகள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கும் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தினர்.

உலகத்தமிழர் வரலாற்று மையம்சுனாமிபடுகொலைபிரித்தானியாமக்கள்மாவீரர்கள்வணக்க நிகழ்வு
Comments (0)
Add Comment