மஹிந்தவை கண்டிக்காதது ஏன்? மனம் திறக்கும் நவிப்பிள்ளை


இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகள் தொடர்பில் தாம் ஒரு வருடத்திற்கு முன்னரே அறிந்திருந்ததாக ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

கனடா – டோரன்டோ பகுதியிலுள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றிய அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமக்கு முன்னதாகவே அறிவித்திருந்ததாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் தொடரும் பயங்கரவாதத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்காக தாம் பாரிய யுத்தமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக 2008ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமக்கு அறிவித்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாகவே தான் மஹிந்த ராஜபக்ஸவை கண்டிக்கவில்லை என ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவனீதம்பிள்ளை மேலும் தெரிவித்துள்ளார்.

நவநீதம்பிள்ளைமகிந்த ராஜபக்சமனித உரிமை ஆணையாளர்
Comments (0)
Add Comment