“காந்தரூபன் எனும் பெயர்
தனி மனிதனுக்குரியதல்ல!
உறவிழந்த பிள்ளைகளின்
ஒளிமயமான வாழ்வு
என்று பொருள் சொல்வோம்!
முகம் காணா எமக்காக ஓர்
உறைவிடம் தந்தவரே!
உங்கள் முகம் அறியவில்லை
உள்ளமதில் நிறுத்தியுள்ளோம் உம்மை!
ஊரறிய பிறந்தும். அன்று
உலகறிய அநாதைகளானோம்! துளிர்விட்டதே உம்மனதில்
எமக்கான பாதை!
செஞ்சோலை, அறிவுச்சோலையென!
“மாமா” எனவழைக்க
உரிமையோடு நீா் அணைக்க
கொடுத்துவைக்கவில்லை – எமக்கு!
உயிரிருந்தும் உணர்விழந்த – எமக்கு
உடலழித்து உயிர்தந்த – உத்தமரே!”
“ஆண்டுகள் எத்தனை போனாலும்
நித்திலத்தில் நாம் வாழும்
வரை நிலைத்திருக்கும் – உம் பெயர்
சோலைதனில் அம்மா,அப்பா.
அண்ணா,தம்பி,தங்கை,அக்கா
என ஒருகுடும்ப உறவையே தந்தீா்!
சித்தி,மாமாவென எம்சிந்தையிலே குடியானீா்!
ஆனந்த வானில் பறந்த – எம்மை
இன்று மறுபடியும் கெளவியதே – இருள்!
இன்று ஆற்றுவோறின்றி
ஆழ்கடலில் துரும்பைப்போல்
தூற்றுவார் கையில்மண்டியிட்டதே வாழ்வு!
அன்று ஆனந்தகண்ணீர்
வடித்தசோலை…இன்று
இரத்தகண்ணீருடன் தேடுதையா.!
தம்முறவை உணா்வை!
மீண்டும் நாதியற்று வந்து
விட்டோம் தெருவில்!
அன்புகொள்ள உறவுமில்லை
அணைத்துவிட அன்னையில்ல!
மீண்டும் வந்தெம்மை வாழவைக்கவேண்டுமென
இந்நாளில்..இருகைஎடுத்து வேண்டுகிறோம். – மாமாவை!
கண்ணீரோடு கதைபேசி
காற்றோடு தூதுவிட்டோம்
கனவோடு வந்துதானும்
கதைபேசிச் செல்ல மாட்டீரோ! – மாமா!
துன்பத்தில் தவிக்கும் எமக்கு
இன்பவழி தருவீரோ – மாமா!
நீர் அடித்து சிதறிய படகு போல
கண்பட்டுப் போனதுவோ – எம்வாழ்வு?
நடைபிணங்களாக வாழும் –உம் பிள்ளைகளிற்காக
மீண்டும் ஜெனனித்து வர – மாட்டீரோ – மாமாவே!
எம்விழியோரம் – உம் நினைவோடு வாழ்வோம்!
மறுவாழ்வுக்கழகமென கட்டுகிறோம்
ஒருகூடு!
மேலிருந்து பாருங்கள் – மாமா!
நிச்சயம் கரையேறும் – இந்தவீடு!
அடக்க நினைப்பவனுக்கு எம் எழுச்சியே இறுதி!
இதுவே உங்களுக்கு நாங்கள் தரும் உறுதி!