முஸ்லிம்களின் தனி மாகாண கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு!

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தனி மாகாண நிலைப்பாடு தொடர்பில், சிறிலங்காவின் பௌத்த சங்கத்தினால் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் தரப்பட வேண்டும் என்று முஸ்லிம்காங்கிரஸின் உறுப்பினர்கள் அண்மைக்காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பில் கட்சியின் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் பௌத்த பிக்குகள் சங்கத்தினர் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையிலேயே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைக்க ஆரம்பித்துள்ளாகவும் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம்கட்சிபௌத்த சங்கம்மாகாணம்முஸ்லிம்ஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment