வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனைப் பாதுகாக்க வடமாகாண சபையின் தலைவர் சி.வி.கே சிவஞானமும் களமிறங்கியுள்ளார். முதலமைச்சரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டமையால், தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புக்கு மேலதிகமானப் பாதுகாப்பை வழங்க இலங்கையின் காவல்துறை அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு, கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
முதலமைச்சரிற்கு தென்னிலங்கையில் உள்ள இனவாதிகளினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடைய பாதுகாப்புக்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான தீர்மானமொன்றை வடமாகாண சபை எடுத்துள்ளது. உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமையால், அவருக்கு மேலதிக காவல்துறை பாதுகாப்பை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.