“வீரமங்கை” செங்கொடியின் 3ம் ஆண்டு வீரவணக்க நாள்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டணை விதிக்கப்பட்ட சாந்தன்,முருகன் மற்றும் வேரறிவாளன் ஆகியோரின் உயிர்காக்க தன்னுயிரை ஈகம் செய்த “வீரமங்கை” செங்கொடியின் 3ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டணையை நிறைவேற்ற இந்திய அரசு முயன்ற வேளை அம் மூவரையும் காப்பாற்றும் நோக்குடன் 28.08.2011 அன்று காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி வீரமங்கை செங்கொடி ஈகைச்சாவடைந்தார்.

தன் இன உறவுகள் மூவரின் உயிர்காக்க தன்னுயிரை ஆகுதியாக்கிய இந்த வீரமங்கைக்கு சிரம் தாழ்ந்த இதய அஞ்சலிகள்.

“வீரமங்கை”3ம்ஆண்டுஇன்றாகும்ஈகம்உயிர்காக்கசெங்கொடியின்செய்ததன்னுயிரைநாள்வீரவணக்க
Comments (0)
Add Comment