மனங்கொண்ட தேசக்காதலில் கண்கள்
கனங்கொண்டு கண்ணீர் மழை தரும்
இனங்கொண்ட வாழ்வின் நிலைகண்டு
சினங்கொண்டு சிந்தை அழும்… – வீரக்
குணங்கொண்ட குடியும் கோனுமாய்
கணங்களும் களம் நின்று பொருதியோர்
பணங்கண்ட ஊனங்கள் நாசவஞ்சகத்தில்
வணங்காமண் வீரவாழ்வை இழந்ததேனோ?
கணமொன்றும் உயிர்பறித்து
கானகங்கள் பற்றியெரித்து
கனல் பொங்கும் கண்ணீரால்- எம்
கடல்களும் எரிந்தபோதும்
வனங்கொண்ட வாழ்வேகி உயிர்
தினத்தந்து தீவளர்த்த திவலை
புனல் தாண்ட முடியாமல் நந்திப்பொய்கையில் மூழ்கி
அனல் தின்று மீண்டெழுந்து
அழியாதே அக்கினப்பறவை!
-காந்தள்-