அச்சத்தை ஏற்படுத்தி எம்மை அடிபணிய வைக்க முடியாது!

இன­ரீ­தி­யான அச்­சத்தை ஏற்படுத்தி அதி­கா­ரத்தை கைப்­பற்ற முயற்­சிக்­கின்­றனர். அச்­சத்தை ஏற்­ப­டுத்தி எம்மை அடி­ப­ணிய வைக்க முடி­யாது. தேசிய நல்­லி­ணக்கம் குறித்த செயற்­பாட்டு ரீதி­யான முன்­னெ­டுப்­புக்கள் மூலமாக, இன­வாத அமைப்­புக் ­களின் செயற்­பா­டு­களை முடி­வுக்கு கொண்­டு­வ­ரலாமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

 சிங்க லே அமைப்பு தொடர்பில் அதிகம் அலட்­டிக்­கொள்­ளத்­தே­வை­யில்லை. நீதி­யையும் நியா­யத்­தையும் மறைப்­ப­தற்கு முயற்­சித்­த­வர்­க­ளுக்கு ஏற்­பட்ட நிகழ்­வு­களை கண்­டி­ருக்­கின்றோம். அனை­வரும் ஒன்­று­பட்டு எமது வர­லாற்று ரீதி­யான பண்­பாடு, கலா­சாரம் என்பனவற்றை பாது­காப்­ப­தோடு சிறந்த எதிர்­கா­லத்­திற்­காக செயற்­ப­ட­வேண்­டு­மெ­னவும் அவர் குறிப்­பிட்டார்.

தேசிய ஐக்­கிய ஊழியர் தொழிற்­சங்­கத்தின் அங்­கு­ராட்­பண வைபவம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­மை­ய­க­மான தாரு­ச­லாமில் நேற்று நடை­பெற்­றது.

இதில் தலை­மை­யு­ரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்­ர­பினால் தேசிய ஐக்­கிய முன்­னணி உரு­வாக்­கப்­பட்­டது. அந்த அர­சியல் கட்­சியின் தேவைக்­கா­கவே இவ்­வா­றான தொழிற்­சங்­க­மொன்று உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டு­மென 1999ஆம் ஆண்டு முனைப்­புக்­களைச் செய்­தி­ருந்தோம். காரணம் எமது கட்­சியை எடுத்­துக்­கொண்டால் இன­வா­தக்­கட்­சி­யென்று குற்றம் சாட்­டு­கின்­றார்கள். ஆகவே எமது கட்­சியின் யதார்த்­தத்தை வெ ளிப்­ப­டுத்­து­வ­தற்­காக இவ்­வா­றா­ன­தொரு தொழிற்­சங்கம் உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டு­மென தீர்­மா­னித்தோம். 16ஆண்­டு­களின் பின்னர் அந்தக் கனவு நன­வா­கி­யி­ருக்­கின்­றது.

இந்த நாட்டில் அர­சியல் கட்­சிகள் உரு­வா­கு­வ­தற்கு முன்­ன­தாக தொழிற்­சங்கள் ஊடா­கவே செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன என்­பதை நாம் அனை­வரும் அறிவோம். ஆசிய பிராந்­தி­யத்தில் 1931ஆண்டு ஜன­நா­ய­கத்தின் உயர்ந்த பண்­பான தேர்தல் முறைமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட முதன்மை மிக்க நாடாக எமது நாடு உள்­ளது. படிப்­ப­டி­யாக எமது நாட்டில் ஜன­நா­யகம் கட்­டி­யெ­ழுப்­பட்­டது. அதற்கு தொழிற்­சங்கள் பேரு­த­வி­யாக இருந்­துள்­ளன.

அவ்­வா­றான தொழிற்­சங்­க­ளுக்கு தலைமை வழங்­கிய தலை­வர்கள் தொடர்பில் நீண்ட பட்­டி­ய­லொன்றே காணப்­ப­டு­கின்­றது. விசே­ட­மாக பாலா தம்பு, கொல்வின் ஆர் டி சில்வா போன்ற நிபு­ணத்­துவம் வாய்­த­வர்கள் உள்­ளார்கள். சிறந்த சட்­டத்­த­ர­ணிகள். இவ்­வா­றா­ன­வர்கள் அர­சியல் அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி என்­றுமே பத­வி­களைப் பெற்­றி­ருக்­க­வில்லை.

ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி என்ற பத­வி­யா­னது சட்­டத்­த­ர­ணி­யொ­ரு­வ­ருக்கு கிடைக்க கூடிய அதி­யுச்ச பத­வி­யாகும். ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன ஜனா­தி­ப­தி­யாக இருந்­த­போது இவர்­களை அந்­தப்­ப­த­விக்­கான கோரிக்­கையை முன்­வைக்­கு­மாறு பல­த­ரப்­புக்­களால் தூத­னுப்­பட்­ட­போதும் அவர்கள் அத­னைப்­பெற்­றி­ருக்­கவே இல்லை. அவ்­வாறு தொழிற்­சங்­கங்கங்களும், தலை­வர்­களும் இருந்­த­போதும் காலக்­கி­ர­மத்தில் தொழிற்­சங்­கங்கள் அர­சி­ய­லுக்குள் அடி­ப­ணிந்து விட்­டன. அர­சியல் கட்­சி­களின் ஒரு பகு­தி­யாக மாறி­யுள்­ளன.

தேர்தல் காலங்­களில் கோரிக்கைளை ஏற்­றுக்­கொள்­வ­தா­கவும் நிறை­வேற்­று­வ­தா­கவும் வாக்­கு­று­திகள் வழங்­கப்­படும். தேர்தல் நிறை­வ­டைந்த பின்னர் அதன் பிர­தி­நி­திகள் அமைச்­சர்­களை பார்ப்­ப­தற்­கான நீண்ட வரி­சையில் காத்­தி­ருப்­பார்கள். இவ்­வா­றான கலா­சா­ரத்­தினுள் இருக்கும் நாம் எமது தொழிற்­சங்­கத்­திற்கும் அவ்­வா­றான நிலை­மை­யொன்று ஏற்­ப­டக்­கூ­டா­தென பிரார்த்­திக்­க­வேண்டும். அந்த வகையில் இவ்­வா­றான தொழிற்­சங்­கத்தின் தலை­மையை நான் சவால்­க­ளுக்கு மத்­தியில் பொறுப்­பேற்­கின்றேன்.

சிங்க லே

உயர் பண்­பா­டுகள், கலா­சா­ரங்கள் தொடர்­பாக பேசும் நாம் மூறு தசாப்த யுத்தம் நிறை­வ­டைந்த சூழலில் இருக்­கின்றோம். யுத்தம் நிறை­வ­டைந்­த­வுடன் அடுத்­த­நொ­டியே அடுத்த கார­ணத்தை தேடும் செயற்­பா­டுகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. அவ்­வா­றா­ன­வொரு சமு­க­மாக சர்­வ­தே­சத்­திற்கு நாம் அடை­யாளம் காட்­டப்­பட்டோம். அதன் கார­ணத்­தா­லேயே இவ்­வ­ளவு பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

தற்­போது சிங்க லே போன்­றவை மேலெ­ழுந்­துள்­ளன. அது தொடர்­பான நான் வாய்­தி­றக்­க­வே­யில்லை. நான் வாய் திறந்தால் அது மேலும் உக்­கி­ர­ம­டையும் ஆபத்­துள்­ளது. ஆகவே நான் அது தொடர்பில் கதைப்­ப­தே­யில்லை. இருப்­பினும் இவ்­வா­றான செயற்­பா­டொன்றை நாமும் ஆரம்­பிப்­போ­மென நகைச்­சு­வை­யாக நினைப்­ப­துண்டு. நாங்­களும் சிங்க லே என சிவப்­புக்கு பதி­லாக பச்சை நிறத்தைப் பொறித்துச் செல்­வோ­மென கரு­து­வ­துண்டு.

சிங்­கள மொழி­யி­ல் லே என்­பது இரத்தம். மனி­தர்கள் அனை­வ­ருக்­குமே ஒரே நிறத்­தி­லேயே இரத்­த­முள்­ளது. அதனை உண­ராது இன்று சில அமைப்­புக்கள் இவ்­வா­றான விட­யத்தை கையி­லெ­டுத்­துள்­ளன. நாட்டில் இவ்­வாறு உரு­வா­கி­யுள்ள புதிய அமைப்­புக்கள் அர­சியல் அச்­சத்தை உரு­வாக்­கு­வ­தறகு முயற்­சிக்­கின்­றன. அவ்­வா­றான ஒரு முயற்­சிதான் இது­வாகும்.

பொலிஸ் பிரிவின் நிலைமை

நாட்டில் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்டும் பொறுப்பைக் கொண்­டி­ருக்­கின்ற பொலிஸ் பிரிவின் நிலைமை மோச­ம­டைந்­தி­ருக்­கின்­றது. எம்­பி­லிப்­பிட்­டிய சம்­பவம் அதனை வெ ளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. நாம் பொலி­ஸாரை குற்றம் சாட்ட முடி­யாது. காரணம் யுத்த காலத்தில் பொலிஸார் பயன்­ப­டுத்­தப்­பட்ட முறை­மை­யா­னது மாறு­பட்­டி­ருக்­கின்­றது.

அதனால் அவர்கள் எந்­த­வி­த­மான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வேண்டும். எதனைச் செய்­ய­வேண்­டு­மென்­பதை மறந்­து­விட்­டார்கள். குழப்­பத்தில் உள்­ளார்கள். பொலி­ஸா­ருக்கு சட்­டத்தை நிலை­நாட்­டு­வ­தற்கும், சட்­டத்­தையும் ஒழுங்­கையும் பாது­காப்­ப­தற்­கு­மான பொறுப்பு உள்­ளது. இவ்­வா­றான இரண்டு விட­யங்­களால் அவர்கள் குழப்­ப­ம­டைந்து எதனைச் செய்­வ­தென அறி­யா­துள்­ளார்கள்.

யுத்­த­கா­லத்தில் விசா­ர­ணை­களை குறைத்­தார்கள். அவ­ச­ர­காலச் சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தமை அதற்கு ஏது­வா­க­வி­ருந்­தது. ஆகவே புதிய நிலைமை தற்­போது ஏற்­பட்­டுள்­ளது. அதற்கு இணங்க நாம் அனை­வ­ரையும் புதி­ய­தாக உரு­வாக்­க­வேண்­டி­யுள்­ளது. பொலிஸ் பிரி­வையும் புதிய சிந்­த­னைக்குள் உள்­வாங்­க­வேண்­டி­யுள்­ளது.

கிறீஸ் பூதம்

கடந்த ஆட்சிக் காலத்தில் கிறீஸ் பூதம் பிரச்­சினை எழுந்­தது. இன்­று­வ­ரையில் அதன் பின்­னணி என்ன யார் தொடர்­பு­டை­ய­வர்கள் என்­பது கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. மக்­க­ளி­டையே பாரிய குழப்பம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. கிறீஸ் பூதத்­தினால் பொலி­ஸாரின் 30இற்கும் மேற்­பட்ட வாக­னங்கள் தீக்­கி­ரைக்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளன. இவை அனைத்­துமே சிறு­பான்மை மக்கள் வாழும் பகு­தி­க­ளி­லேயே நடை­பெற்­றுள்­ளன. அதுவும் விநோ­த­மா­னது. அர­சாங்­கத்­திற்கு எதி­ரான சக்­தி­களின் செயற்­பா­டுகள் என்றே காரணம் கூறப்­பட்­டது. பொது­மக்கள் பொலி­ஸாரின் வாக­னத்­திற்கு தீவைக்­கு­ம­ள­விற்கு நிலை சென்­றி­ருக்­கின்­ற­தென்றால் இவ்­வி­டயம் சாதா­ர­ண­மா­ன­தொன்­றல்ல. ஆனால் இன்­று­வ­ரையில் எது­வுமே தெரி­யா­துள்­ளது.

கலை­ஞர்கள்

கலை­ஞர்­களை பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்­சியும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் தமது கட்­க­ளினுள் உள்­வாங்­கு­தற்கு முனைப்­புக்­களை மேற்­கொண்­டன. அவை முடி­யாத பட்­சத்தில் பழி­வாங்­கல்­களை மேற்­கொள்ளப்­பட்­டன. அவர்கள் வரு­மா­ன­மீட்டும் வாய்ப்­புக்­கள் தடை­செய்­யப்­பட்­டன. ஆனால் அவர்­களின் திற­மையும் பிர­பல்­யமும் குறை­வ­டை­ய­வில்லை. அவர்­களின் வரு­மானம் தடை­செய்­யப்­பட்­டு­விட்­ட­தென அர­சியல் கட்­சிகள் கரு­தி­ய­போதும் முழு அர­சாங்­கமே ஆட்­சியை விட்­ட­க­ல­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது.

புதிய இலக்கு

அவ்­வா­றான யுக­மொன்­றி­லி­ருந்து விடு­பட்டு வந்­தி­ருக்­கின்றோம். ஜனா­தி­பதி, பிர­தமர் அத்­த­கைய நிலைமை ஏறபடாதென்­பதை உறுதி செய்­தி­ருக்­கின்­றார்கள். புதிய இலக்­குடன் பய­ணிப்­ப­தற்­கான சுதந்­தி­ர­மான சூழ­லொன்றை ஏற்­ப­டுத்­தவே தயா­ரா­க­வி­ருக்­கின்றோம். அது இல­கு­வான விட­ய­மல்ல. தகவல் அறியும் சட்­ட­மூ­லத்தை நிறை­வேற்­று­வ­தற்­கான முயற்­சிகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. அச்­சட்­ட­மூலம் நடை­மு­றைக்கு வரு­மானால் ஊழல்­மோ­ச­டிகள், குற்றங்கள் தொடர்பில் மேலும் பல விடயங்கள் பகிரங்கமாகும்.

எமது கலாசாரம், பண்பாடு,வரலாற்று முக்கியத்துவமான விடயங்கள், புதிதாக மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் அனைத்தையும் விடுத்து லே சம்பந்தமாக பேசும் நிலைமைக்கு வந்திருக்கின்றோம். இரத்தம் என்ன நிறம் என்பதை ஸ்டிக்கர் ஒட்டுவதன் மூலம் வெ ளிப்படுத்தும் நிலைமையில் இருக்கின்றோம். இந்தச்செயற்பாட்டில் என்ன இலாபம் அடையப்போகின்றார்கள் எனத் தெரியவில்லை. இவ்வாறான செயற்பாடுகளால் எந்தப்பயனும் அடையப்போவதில்லை. ஆகவே இது தொடர்பாக அதிகம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை.

இவ்வாறான செயற்பாடுகளால் அச்சத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள். அவ்வாறு அச்சத்தை ஏற்படுத்தி எம்மை தொடர்ந்தும் அடிபணி வைக்க முடியாது. இந்த நாட்டில் நீதி நியாயத்தை மூடி மறைத்தவர்களுக்கு ஏற்பட்ட நிகழ்வுகள் உள்ளன. தொடர்ந்தும் அவ்வாறு செயற்படுகின்றமையால் எம்மை அடிபணிய வைக்கமுடியுமெனக் கருதுபவர்கள் இருக்கின்றார்கள். ஆகவே தேசிய நல்லிணக்கம் தொடர்பாக வெறுமனே வார்தையால் பேசிக்கொண்டிருக்காது செயற்பாட்டு ரீதியாக முன்னெடுக்கவேண்டும் என்றார்.

அச்சத்தைஎம்மை அடிபணியஏற்படுத்திமுடியாதுவைக்க
Comments (0)
Add Comment