அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த சங்ககார – பீட்டர்சன்

இங்கிலாந்து கவுண்டிப் போட்டியில் லங்காஷயர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நட்சத்திர வீரர்களான சங்கக்காரா, பீட்டர்சன் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர்.

லங்காஷயர்- சரே அணிகள் மோதும் போட்டி ஓவலில் நேற்று தொடங்கியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற லங்காஷயர் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதைத் தொடர்ந்து சரே அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

தொடக்க வீரராக களமிறங்கிய ரொரி பர்ன்ஸ் (12) நிலைக்கவில்லை. சங்கக்காரா அசத்தலாக ஒரு ஷாட் அடித்தார். ஆனால் பைன் லெக்கில் இருந்த பால்க்னரின் பிடியில் 10 ஓட்டங்களில் வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து வந்த பீட்டர்சன் (2) ஸ்லிப்பில் பிடி கொடுத்து நடைக் கட்டினார். நிதானமாக விளையாடி வந்த அன்சாரி 37 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் சரே அணி 46 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்களை எடுத்துள்ளது.

தற்போது ஸ்டீவ் டாவீஸ் (41),ஜோசன் ரோய் (21) நிதானமாக விளையாடி வருகின்றனர். லங்காஷயர் சார்பில், ஜெர்விஸ் 2, டாம் பெய்லி, ஜோர்டன் கிளார்க் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

ஆட்டமிழப்புஆட்டம்இங்கிலாந்துகவுண்டிசங்ககாரநட்சத்திரபீட்டர்சன்போட்டிலங்காஷவீர்ரகள்
Comments (0)
Add Comment