அதி­காரப் பகிர்வு! முழு­ப் பெறு­ம­திக்கு ஒற்றுமை அவசியம்

தமிழ் மக்­களும் முஸ்லிம் மக்­களும் ஒற்­று­மை­யாக ஒரு­மித்து இருந்தால் மாத்­தி­ரமே அதி­காரப் பகிர்வின் முழு­மை­யான பெறு­ம­தியை நாங்கள் பெற முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் தெரி­வித்தார்.

மண்டூர் பிர­தே­சத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள ஒருங்­கி­ணைந்த பண்ணையைத் திறந்து வைத்து உரை­யாற்றும் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் தொ­டர்ந்து உரை­யாற்­று­கையில், நாங்கள் தற்­பொது புதிய அர­சியல் சாச­னத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சியில் ஈடு­பட்­டி­ருக்­கிறோம். பாரா­ளு­மன்றம் அர­சியல் சாசன சபை­யாக மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டுள்­ளது. புதிய அர­சியல் சாச­னத்தை உரு­வாக்கும் நோக்கில் 21பேர­டங்­கிய வழி­ந­டத்துக் குழு நிர்­ண­யிக்­கப்­பட்டு அத­னு­டைய முதல் அமர்வு இடம் பெற்று இம் மாதம் 28ஆம் திகதி மறு­படி வழி நடத்­துக்­குழு கூட இருக்­கி­றது.

அதி­கா­ரப்­ப­கிர்வு என்­பது கணி­ச­மான அளவில் முன்­னேற்றம் கண்­டி­ருக்­கி­றது. இந்த விடயம் சம்­பந்­த­மாக நாங்கள் கடந்த 35 வரு­டங்­க­ளாக பேச்­சுக்­களில் ஈடு­பட்­டி­ருக்­கிறோம். பிரே­ம­தாச காலத்தில், சந்­தி­ரிகா காலத்தில், ரணில் காலத்தில், மகிந்த காலத்தில் என பல்­வேறு பேச்­சுக்கள் நடத்­தப்­பட்­டுள்­ளது. சர்வ கட்சிக் குழுக்கள் உள்­ளிட்ட குழுக்­க­ளி­டமும் அறிக்­கைகள் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.
அர­சியல் சாசன குழ என்­பது பல்­வேறு நிபு­ணர்­க­ளு­டைய கருத்­துக்­களை வைத்துக் கொள்­ளலாம். இது போன்ற நிலையில் மக்­க­ளு­டைய கருத்­துக்­களை அறியும் வகை­னயில் மக்­களைச் சந்­தித்து மக்­க­ளது கருத்­துக்­களைக் கேட்­ட­றிந்து தங்­க­ளு­டைய அறிக்­கையை இந்த மாதம் முடி­வ­தற்கு முன் அர­சாங்­கத்­திற்கு கொடுக்க வேண்டும்.

கடந்த கால தேர்­தல்­களில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினால் முன்­வைக்­கப்­பட்ட பிரிக்­கப்­ப­டாத ஒற்­று­மை­யான இலங்கை நாட்­டுக்குள் முழு­மை­யான விசு­வா­ச­மான இறை­மையின் அடிப்­ப­டையில் அளிக்­கப்­ப­டு­கின்ற அதி­காரப் பகிர்வின் ஊடாக, வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்­க­ளு­டைய பிறப்­பு­ரிமை உறுதி செய்­யப்­பட்டு, சமத்­து­வ­மான சமா­தா­ன­மாக வாழக்­கு­டிய அடிப்­ப­டையை எமது மக்கள் அங்­கீ­க­ரித்­தி­ருக்­கி­றார்கள். அதன் அடிப்­ப­டையில் ஏற்­ப­டு­கின்ற தீர்வு, உறு­தி­யான, நிலை நிற்கக் கூடிய அர­சியல் தீர்­வாக அமையும் என்று எதிர்­பார்க்­கின்றோம். அதனை முன்­வைத்­துத்தான் நாமும் பய­ணத்துக் கொண்­டி­ருக்­கிறோம்.
அந்தத் தீர்வு விரையில் ஏற்­பாட வேண்டும் என்­பது எங்­க­ளது எதிர்­பார்ப்பு, விசே­ட­மாக தமிழ் மக்கள் இந்தச் சந்­தர்ப்­பத்தில் ஒற்­று­மை­யாக நிற்­க­வேண்­டி­யது அவ­சியம். எங்­க­ளு­டைய பலம் ஒற்­று­மையில் தான் தங்­கி­யி­ருக்­கி­றது. அதே வித­மாக முஸ்லிம் மக்­க­ளிடம் கேட்டுக் கொள்­வது நீங்­களும் ஒற்­று­மை­யாக, ஒரு­மித்து நிற்க வேண்டும். உங்­க­ளு­டைய பலமும் அதில் தான் இருக்­கி­றது என்பதேயாகும் .

செல்வா டட்லி ஒப்பந்தமும். பண்டா செல்வா ஒப்பந்தமும் தமிழ் மக்களுக்காக மட்டும் செய்யவில்லை, தமிழ்பேசும் மக்களுக்காகச் செய்தார்கள். 87இல் ரஜீவ் காந்தியுடன் ஜெயவர்த்தனாவால் செய்யப்பட்ட ஒப்பந்தத்திலும் தமிழ் பேசும் மக்கள் என்றுதான் செய்தார்கள் என்றார். .

அதிகாரப் பகிர்வுசமஷ்டிசம்பந்தன்தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராசாஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்
Comments (0)
Add Comment