அதிகாரத்தை பகிர்ந்த எந்த நாடும் பிரிந்ததில்லை! லக்ஷ்மன் கிரியல்ல!!


அதிகாரத்தை பகிர்வதனால் எந்தவொரு நாடும் பிரிவதில்லை என்று தெரிவித்துள்ள சபை முதல்வரும் உயர்கல்வி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியல்ல கிணற்றுத் தவளைப்போல இருக்க வேண்டும் என்றும் சாடியுள்ளார். புதிய அரசியலமைப்பில் அதிகாரப் பகிர்வு உறுதிப்படுத்தப்படும் என்றும் அதற்கே மக்கள் ஆணை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தை பகிர்வதனால் எந்தவாரு நாடும் பிரிந்ததில்லை என்பதற்கு இந்தியா நல்ல எடுத்துக்காட்டு என்றும் அவர் தெரிவித்தார். ஒற்றையாட்சிக்குள் அதிகாரம் பகிரப்பட்டு மாகாணங்களுக்கு அதிகாரங்கள் அதிகரிக்கப்படும் என முதலமைச்சர்கள் சம்மேளனக்கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துத் தொடர்பிலேயே சபை முதல்வரும் உயர்கல்வி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

இதேவேளை ஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தை பகிரவே பாராளுமன்றம் அரசியலமைப்புச் சைபயாக மாற்றப்பட்டது என்று தெரிவித்துள்ள அவர் இது தொடர்பில் அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்திவருவதாகவும் தெரிவித்தார். அத்துடன் அதிகாரத்தை பகிர்வதால் நாடு பிரியும் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள இயலாது என்றும் கூறினார்.

உலகின் மாற்றங்களுக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும் என்று தெரிவித்த சபை முதல்வரும் உயர்கல்வி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியல்ல கிணற்றுத் தவளைகள் போல் இனியும் இருக்க கூடாது என்றும் தெரிவித்தார். மக்களின் ஆணைக்கு இணங்க அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப் படுத்தும் செயலை உசாதீனம் செய்ய முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வுஒற்றையாட்சிசமஷ்டிதமிழர் பிரச்சினைமாகாணங்கள்லக்ஸ்மன் கிரியல்ல
Comments (0)
Add Comment