ஐபிஎல் தொடர் தனக்கு அதிக பாடங்களை கற்றுக் கொடுப்பதாக இலங்கை அணியின் சகலதுறை வீரரான திசர பெரேரா தெரிவித்துள்ளார்.
இவர் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணியில் இடம்பிடித்திருந்தார். தற்போது இந்தியாவில் நடந்து வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் விளையாடி வருகிறார்.
இது தொடர்பாக திசர பெரேரா கூறுகையில், ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள், அணித்தலைவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அதிகமாக உள்ளனர்.
இதன் மூலம் நாம் அதிக ஆலோசனைகளை அவர்களிடம் இருந்து பெற முடியும். அதே சமயம் அதிகம் கற்றுக் கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.
மேலும் டி20 மற்றும் 50 ஓவர் போட்டிகளில் அதிக ஆர்வம் உள்ளதாக தெரிவித்த பெரேரா, டெஸ்ட் போட்டிகளில் விளையாட விருப்பம் உள்ளதாகவும், அதிரடியை மட்டுமே தனது ஸ்டைலாக வைத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.