இதையடுத்து பார்த்திவ் பட்டேலுடன்
இணைந்தார் அம்பத்தி ராயுடு. இந்த ஜோடி ஆரம்பத்தில் நிதானம் காட்ட, முதல் 5 ஓவர்களில் 25 ஓட்டங்களையே எடுத்தது மும்பை.
ஆனால் 6ஆவது ஓவரிலிருந்து அதிரடியில் இறங்கிய இந்த ஜோடி சிக்ஸரையும், பவுண்டரியையும் பறக்கவிட்டது. இதனால் அடுத்த 5 ஓவர்களில் 52 ஓட்டங்கள் கிடைக்க, முதல் 10 ஓவர்களில் 77 ஓட்டங்களை எட்டியது மும்பை.
இதில் ராயுடு, 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ராயுடு–-பட்டேல் ஜோடி 2ஆவது விக்கெட்டுக்கு 14.1 ஓவர்களில் 137 ஓட்டங்களைக் குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் 24 ஓட்டங்களுடன் வெளியேறினார். மறுமுனையில் நின்ற பார்த்திவ் பட்டேல் 81 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 189 ஓட்டங்களைக் குவித்தது.
190 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 25 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது.
இதில் மெக்ஸ்வெல் நம்பிக்கையளிக்கும்படி ஆடி 56 ஓட்டங்களை குவிக்க, மார்ஷ் 45 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். அணித் தலைவர் மில்லர் ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களுடன் களத்தில் நின்றார். இதில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் முரளி விஜய் 19 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்க ஏனைய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.