அந்த கரும்புலிகள் நினைத்திருந்தால் எம்மையும் எங்கள் பிள்ளைகளையும் கொன்றிருக்கலாம்! – அவர்கள் அப்படிச் செய்யவில்லை! சிங்களத் தாய் – கொழும்பில் நடந்த உண்மைச்சம்பவம்..

1996 காலப்பகுதி அது. அப்போது பாதுகாப்பு  அமைச்சராக அனுருத்த ரத்வத்த இருந்தார்.அவரது காலப்பகுதியில் கிழக்கில் பெருமளவில் தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டனர், வடக்கிலும் பெருமளவான தமிழர்கள் விமானத்தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்தன.

இதனால் ஜெனரல் ரத்வத்த வை கொழும்பில் வைத்து கரும்புலிகளின் தாக்குதல் மூலம் அழிக்க விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையினால் திட்டம் தீட்டப்பட்டது. அதன் படி கொழும்பில் ஒரு பத்திரிகை நிறுவனத்தினை திறந்து வைப்பதற்காக ஜெனரல் ரத்வத்த வருவதாகவும், அங்கு வைத்து தாக்குதல் நடத்துவதற்காக கரும்புலிகள் அணி கொழும்பிற்கு அனுப்பப்பட்டது.

ஜெனரல் ரத்வத்த ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சர் என்பதால் அவரது வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரத்வத்த விற்கு தனிப்பாதுகாப்பு படையணி கொடுக்கப்பட்டிருந்தது. அன்று காலை எட்டு மணிக்கு ஜெனரல் ரத்வத்தவினால் அந்த நிறுவனம் திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே அன்று காலையில் வீதிகள் எங்கும் விசேட அதிரடிப்படை தயார் நிலையில் விடப்பட்டிருந்தனர். இலகுவில் அவர்களை தாண்டி செல்வது கடினம்.

கரும்புலிகள் அணியும் சினிமா பாணியில் உள்ளே செல்ல திட்டமிட்டனர். அதன்படி ஒரு வாகனத்தில் இராணுவ உடையில் சற்று வித்தியாசமான உடையில் அந்தப்பகுதிக்கு சென்றனர். வீதியில் நின்ற விசேட அதிரடிப்படையினர் இவர்களை மறித்து விசாரித்த போது தாங்கள் ஜெனரல் ரத்வத்தவின் தனிப்பட்ட பாதுகாப்பு அணி எனக்கூறியதும் உடனடியாக அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

கரும்புலிகள் அணியும் உள்ளே வெற்றிகரமாக சென்று விட்டனர். துரதிஷ்டவசமாக எட்டு மணிக்கு வரவேண்டிய ஜெனரல் ரத்வத்த பத்துமணிக்கு என நேரம் மாற்றப்பட்டது.

கரும்புலிகள் அணியினரும் உள்ளே சென்று தாக்குதலுக்கு ஏற்ற வகையில் தயாராகியிருந்தனர். திறப்பு விழாவுக்காக பணியாளர்கள் விருந்தினர்களும் வந்துவிட்டனர். அவர்களுக்கு தெரியாது இவர்கள் கரும்புலிகள் என்று.

ஒன்பது மணியளவில் ஜெனரல் ரத்வத்தவின் விசேட பாதுகாப்பு அணி வந்ததும் அவர்களை இடைமறித்து விசாரித்த விசேட அதிரடிப்படை அவர்களிடம்  ஏற்கனவே உள்ளே உங்கள் அணி சென்றுவிட்டது எனக்கூறியதும் அவர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது.

உடனடியாக அவர்களை விசாரிக்குமாறு கூறியதும் உள்ளே வந்திருப்பது  கரும்புலிகள் அணிதான் என்பதை அறிந்துகொண்டனர். உடனடியாக அந்த இடம் சுற்றிவளைக்கப்பட்டது. ஜெனரல் ரத்வத்தவின் வருகையும் ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அங்கிருந்த ஒரு சிங்களத்தாய் பி.பி சி செய்தி நிறுவனத்துக்கு கூறுகையில்..  கரும்புலிகளும் தாக்குதலுக்கு தயாராகி  அங்கிருந்த ஒலிப்பெருக்கியில் மக்களுக்கு இவ்வாறு தெரிவித்தனர்.’’அன்பார்ந்த சிங்கள உறவுகளே நாங்கள் உங்களை அழிப்பதற்காக இங்கு வரவில்லை எம்மண்ணில் எம்மக்களை அழிக்கும் இராணுவத்துடன் மட்டுமே தாக்குதல் நடத்துவோம். நீங்கள் பாதுகாப்பாக இருக்கலாம்’’ என சிங்களத்தில் அறிவித்தல் விடுத்தனர்.

திறப்பு விழா நடக்கும் இடத்தில் இருந்த விருந்தினர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பயத்தில் ஓரிடத்தில் ஒதுங்கி இருந்தோம். அப்போது அங்கு  வந்த ஒரு கரும்புலி எனது  குழந்தையை அருகில் வருமாறு அழைத்தார். நான் பயத்தில் அவரிடம் அனுப்பவில்லை. மேலும் அவர்களுக்கு பசிப்பதாகவும் உணவுகள் இருந்தால் தருமாறும் கூறினார். நாமும் எம்மிடமிருந்த உணவுகளை அவர்களிடம் கொடுத்தோம். அவர்கள் அதை சாப்பிட்டு விட்டு எங்களிடம் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு எங்களை பார்த்து உணவு தந்ததுக்கு நன்றி. நீங்கள் பயப்பிடாதீர்கள் நாம் உங்களை எதுவும் செய்யமாட்டோம் என சிங்களத்தில் கூறிவிட்டு அனைவரும் வெளியே சென்றனர்.

எமக்கு அவர்கள் சண்டையிடும் சத்தம் அருகிலேயே கேட்டது. அதில் ஒரு கரும்புலி, உள்ளே வந்த எமது அதிரடிப்படையினருக்கு அருகில் வைத்து வெடித்து சிதறுவதை என் கண்ணால் பார்த்தேன். அவர்கள் தாங்கள் சாவது உறுதி எனத் தெரிந்தும் அவர்கள் முகத்தில் பயத்தை பார்க்க முடியவில்லை. அன்று அவர்கள் நினைத்திருந்தால் அவர்களுடன் எங்களையும் அழித்திருக்கலாம்.ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை.என பி.பி.சி க்கு கூறியிருந்தார். அன்று அந்த சம்பவத்தில் பதினோரு கரும்புலிகள் முகவரியில்லாமல் தாய்நாட்டுக்காக தங்களை அழித்துக்கொண்டனர். புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்பது சிங்கள மக்களுக்கும் தெரியும். ஆனால் இனவாத பிக்குக்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரே நடந்த அழிவுக்கு காரணமானவர்கள் ஆவர்.  இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக லண்டன் பி.பி.சி செய்தி நிறுவனம் ஒரு ஆவணக்கனோளியினை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 2011 ம் ஆண்டு கண்டி மருத்துவமனையில் வைத்து ரத்வத்த  திடீர் மரணமடைந்தார். அது கொலை என கொழும்பு நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டு கொலைக்கான ஆதாரங்கள் இல்லாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் எந்தவொரு சிங்கள மக்களும் கொல்லப்படவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.

 

கரும்புலிகள்கொழும்புஜெனரல் ரத்வத்ததாக்குதல்புலனாய்வுத்துறை
Comments (0)
Add Comment