அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடும் வீடுகளும் வழங்கப்படுமாம்!

பாரா­ளு­மன்றம் நிர்­மா­ணிக்­கப்­பட்ட போது தண்ணீர் தேங்கி நிற்­ப­தற்­காக 1000 ஏக்கர் நிலம் ஒதுக்­கப்­பட்­டது. ஆனால் இன்று அதில் 500 ஏக்கர் தான் எஞ்­சி­யுள்­ளது என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று சபையில் தெரி­வித்துள்ளார்.

அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­தற்கும் ஜனா­தி­ப­தி­யுடன் பேச்சு நடத்தி தீர்­மா­னத்தை எடுத்­துள்ளோம். அர­நா­யக்­கவில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு வேறு இடத்தில் புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்­கப்­படும் எனவும் பிர­தமர் குறிப்­பிட்டார்.

அனர்த்­தத்தால் மர­ண­மா­ன­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கும் இச்­ச­பையின் ஆழ்ந்த அனு­தா­பங்­க­ளையும் கவ­லை­யையும் தெரி­வித் துக் கொள்­கிறோம் என்றும் பிர­தமர் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற நாட்டில் ஏற்­பட்ட மழை வெள்ளம், மண்­ச­ரிவு அனர்த்தம் தொடர்­பான விசேட சபை ஒத்­தி­வைப்பு பிரே­ரணை மீதான விவா­தத்தில் உரை­யாற்­றுகையிலேயே பிர­தமர் இவ்­வாறு தெரி­வித்தார்.

சபையில் பிர­தமர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;

இப் பாரா­ளு­மன்­றத்தை நிர்­மா­ணிக்கும் போது1000 ஏக்கர் நிலப்­ப­ரப்பு தண்ணீர் தேங்கி நிற்­ப­தற்­காக ஒதுக்­கப்­பட்­டது.ஆனால் இன்று அதில்

500 ஏக்­கரே எஞ்­சி­யுள்­ளது. ஏனை­ய­வற்றில் கட்­டி­டங்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது. மண் நிரப்­பப்­பட்­டுள்­ளது.

எனவே இவ்­வா­றான செயற்­பா­டுகள் தொடர்­பாக நாம் கவனம் செலுத்த வேண்டும். புதிய திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். சட்­டங்­களும் தேவை­யா­க­வுள்ள.

1975 ஆம் ஆண்டு தொடக்கம் மழை வெள்ளம் தொடர்பில் எனக்கு அனு­பவம் உள்­ளது. எனவே கடந்த காலங்­களில் இடர் முகா­மைத்­துவம் தொடர்பில் பாரிய குறை­பா­டுகள் காணப்­பட்­டன.

அக்­கு­றை­பா­டுகள் அனைத்தும் நீக்­கப்­பட வேண்டும். அதற்­கான திட்­டங்­களை நாம் தயா­ரிக்க வேண்டும்.

அனர்த்தம் ஏற்­பட்ட நாள் தொடக்கம் அனைத்து மத அமைப்­புக்­களும் பொது மக்­களும் சுயேட்சை அமைப்­புக்­களும் என பலர் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உத­வி­களை வழங்­கி­னார்கள்.

அதே­போன்று வெளி­நா­டு­களும் உத­வின. எதிர்க்­கட்சித் உறுப்­பி­னர்­களும் தம்­மா­லான அனைத்து உத­வி­க­ளையும் செய்­தனர்.

இவர்கள் அனை­வ­ருக்கும் எமது நன்­றி­களை இத் தரு­ணத்தில் தெரி­வித்துக் கொள்­கிறோம்.

நீண்ட காலத்­திற்கு பிறகு நாட்டில் இவ்­வா­றான பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு ஆரம்பக் கட்­ட­மாக உணவு வழங்­கப்­பட்­டது. பாரி­ய­ளவில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு ஏனைய அடிப்­படை வச­தி­களை வழங்க வேண்டும். அதே­போன்று மக்­க­ளுக்­கான வசிப்­பி­டங்­களை நிர்­மா­ணித்துக் கொடுக்க வேண்டும்.

இவை­ய­னைத்­தையும் அர­சாங்கம் முன்­னெ­டுக்கும். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­தற்கும் ஜனா­தி­ப­தி­யுடன் பேச்சு நடத்தி தீர்­மா­னத்தை எடுத்­துள்ளோம்.

அர­நா­யக்­கவில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு வேறு இடத்தில் புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்­கப்­படும்.

இடர் முகா­மைத்­துவம் தொடர்­பாக பாரிய முறைப்­பா­டுகள் உள்­ளன. எனவே அந்த குறை­பா­டுகள் நீக்­கப்­பட வேண்­டி­ய­தோடு எமக்கு புதிய சட்­டங்­களும் தேவைப்படுகிறது. என அவர் தெரிவித்துள்ளார்.

அனர்த்தம்இயற்கைநஷ்ட ஈடுமண்சரிவுரணில்வீடுகள்வெள்ளம்
Comments (0)
Add Comment