அனைத்துலக பெண்கள் தினம் மார்ச்8 நாளையதினம் அனைவரையும் அழைக்கின்றோம் வாருங்கள்.

அனைத்துலக பெண்கள் தினமான மார்ச் 8 நாளைய நாளில் பெண்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தும் நிகழ்வு ஒன்றை புலத்தில் தமிழ் மகளிர்அபிவிருத்தி மன்றம் நடாத்தவுள்ளது.

அனைத்துலக பெண்கள் தினமானது வருடாவருடம் உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த இனத்தின் பெண்களின் மாற்றங்களை ஊக்குவிக்கும் நாளாகவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ்வருட சர்வதேச பெண்கள் தினமானது மாற்றங்களை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் இவ்வருடம் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இந்நாளில் எங்கள் பெண்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தும் நிகழ்வாக தமிழ் மகளிர் அபிவிருத்தி மன்றமானது இந்நாளை முன்னெடுக்கவுள்ளது.

போரால் பாதிப்புற்ற தாயகப் பெண்களின் மறுவாழ்வு அவர்களுக்கான குரல்களை உலகிற்கு எடுத்துச் சொல்லும் களமாகவும் இந்த நிகழ்வு அமையும்..இந்நாளில் புலம்பெயர் பெண்களை ஒன்றுகூட்டி குரல் கொடுப்பதோடு எங்கள் பெண்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்த ஆதரவுகளையும் வழங்க முன்வருமாறு உரிமையுடன் அழைக்கிறோம்.

போருக்குப் பின்னர் தாயகத்தில் பெண்களின் வாழ்வு வாழ்வுரிமை மறுப்பு அதேபோல புலத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தற்கொலைகள் மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் பெண்களுக்கான கல்வி தொழிற்கல்வி முன்னேற்றங்களை முன்னெடுக்கக் கூடிய வழியை ஏற்படுத்தும் பட்டறை பயிற்சியும் இந்நாளில் வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் சடடத்தரணிகள் விரிவுரையாளர்கள் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சமூகப்பணியில் பங்காற்றும் பெண்கள் போராட்டத்தில் பங்காளிகளாகவும் பலமாகவும் நின்ற பெண்கள் என பல்தரப்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.

புலம்பெயர் நாடுகளில் வாழும் பெண்கள் ஆண்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம் என தமிழ் மகளிர்அபிவிருத்தி மன்றத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்..

தமிழ் மகளிர்அபிவிருத்தி மன்றம்பெண்கள் தினமான மார்ச் 8மறுவாழ்வு
Comments (0)
Add Comment