நியூயார்க்கில் இன்று காலை நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில், ரஷ்யாவின் டியாட்சென்கோ, முதல் நிலை வீராங்கனையான செரீனாவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செரீனா வில்லியம்ஸ், முதல் செட்டை 6-0 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் செரீனா 2-0 என முன்னிலை பெற்றிருந்தபோது, காயம் காரணமாக டியாட்சென்கோ விலகினார். இதையடுத்து செரீனா வில்லியம்ஸ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.