அரசியல் கைதியான முத்தையா சகாதேவன் நீண்டகாலம் தடுப்பில் இருந்து உயிரிழந்து வீடுவந்த அவலம்

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலைவழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட அரசியல் கைதியான முத்தையா சகாதேவன் நோய்வாய்ப்பட்டு சிறைசாலையில் மரணமடைந்தார்.

இவரது இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் 27.06.2019 வியாழக்கிழமை நடைபெற்றது. எந்தக்குற்றமும் செய்யாது 2005ம் ஆண்டிலிருந்து இன்றுவரை சிறைவாசம் அனுபவித்து வந்த சகாதேவன் உயிருடன் வீடு திரும்புவார் என எதிர்பார்த்திருந்த அவரது குடும்பத்தினருக்கு அவரது உயிரற்ற உடலே வீடு வந்து சேர்ந்தது. அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது.


அவலம்
Comments (0)
Add Comment