அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் சாட்சியாளர்களாகவும் உத்தரவாதம் அளிப்பவர்களாகவும் மத்தியஸ்தம் வகிக்கும் தரப்பினர் செயற்பட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற அரசியலமைப்பு தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் செயலமர்வின் போது சிவாஜிலிங்கம் தனது முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளார்.
தனது மனக்குறைகளுக்கான எந்தவொரு தீர்வுமின்றி கடந்த 70 ஆண்டுகளாக அரசியல் உரிமைகளுக்காக இலங்கைத் தமிழர்கள் போராடிவருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த போராட்டத்தில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், நாட்டில் நீடித்த சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் தமிழர்களின் குறைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு வழங்க வேண்டும் என எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.