அரைஇறுதி வாய்ப்பு தென்னாபிரிக்காவிற்கு கிடைக்குமா?

உலக கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசிடம் மண்ணை கவ்வியதன் மூலம் தென்ஆப்பிரிக்காவின் அரைஇறுதி வாய்ப்பு மங்கி போய் விட்டது.

இனி மற்ற அணிகளின் முடிவை சார்ந்து இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவுக்கு அரைஇறுதி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி இங்கிலாந்தை கட்டாயம் வீழ்த்தியாக வேண்டும். அவ்வாறு நிகழ்ந்து, தென்ஆப்பிரிக்க அணி தனது கடைசி லீக்கில் இலங்கையை வீழ்த்தும் பட்சத்தில் மூன்று அணிகள் தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும்.

அப்போது ‘ரன்-ரேட்’ அடிப்படையில் தென்ஆப்பிரிக்காவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம்.  ஒரு வேளை இன்றைய மோதலில் இங்கிலாந்து வென்றால், அதன் பிறகு தென்ஆப்பிரிக்கா, இலங்கை இரு அணிகளும் வெளியேறி விடும்.

அரையிறுதிஉலககோப்பைகிரிகட்தென்னாபிரிக்காதோல்விவாய்ப்புவெஸ்ட்இண்டீஸ்
Comments (0)
Add Comment