அர்ஜெண்டினாவை வீழ்த்தியது உக்ரைன் அணி!

கேரளாவில் மகிந்திரா மற்றும் மகிந்திரா நாக்ஜீ கோப்பை சர்வதேச கிளப் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடந்துவரும் நிலையில், நேற்றிரவு கார்ப்பரேசன் ஈ.எம்.எஸ். மைதானத்தில் நடந்த போட்டியில் உக்ரைன் நாட்டின் டிநிப்ரோ எப்.சி. அணி 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணியை வீழ்த்தி அரை இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.

டி நிப்ரோ அணியின் முதல் கோலை யூரி வகல்கோ அடித்து அந்த அணியை வெற்றிப் பாதையில் இட்டுச் சென்றுள்ளார். அதனை தொடர்ந்து அந்த அணியின் மற்றொரு வீரரான விடாலி கிரியேவ் அடுத்த கோலை அடித்ததைத் தொடர்ந்து 2-0 கோல் கணக்கில் உக்ரைன் அணி வெற்றியை பெற்றது.

இந்நிலையில், உக்ரைன் நாட்டின் எப்.சி. பெகாரெஸ்டி அணி இன்று நடைபெறும் போட்டியில் பிரேசில் அணியின் அத்லெட்டிகோ பேராநேயன்ஸ் அணியுடன் விளையாடுகிறது. மேலும், நாக்ஜீ கோப்பைக்கான போட்டியில் வெளிநாட்டை சேர்ந்த 8 அணிகள் குறித்த போட்டித் தொடரில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அணிஅர்ஜெண்டினாவைஉக்ரைன்வீழ்த்தியது.
Comments (0)
Add Comment