அல்ஜீரிய அதிபரின் வேண்டுகோளை நிராகரித்தார் அல்ஜீரிய தலைமை பயிற்சியாள்ர்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2-வது சுற்று ஆட்டத்தில் வட அமெரிக்க நாடான அல்ஜீரியா கூடுதல் நேரத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் வலுவான ஜெர்மனியிடம் தோல்வி கண்டு வெளியேறியது. 

முதல்முறையாக 2-வது சுற்றுக்கு தகுதி பெற்ற அல்ஜீரியா அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த 61 வயதான போஸ்னியாவை சேர்ந்த முன்னாள் வீரர் வாத் ஹலில்ஹோட்ஜிச் திட்டமிட்டபடி பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பயிற்சியாளராக நீடிக்க அல்ஜீரியா அதிபர் விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்க மறுத்து விட்டார். துருக்கியில் உள்ள கிளப் அணியின் பயிற்சியாளராக வாத் நியமனம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

இருந்துசேர்ந்ததிட்டமிட்டபடிபதவியில்போஸ்னியாவைமுன்னாள்வாத்விலகுகின்றார்வீரர்ஹலில்ஹோட்ஜிச்
Comments (0)
Add Comment