அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பட்டம் வென்றார்

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பட்டம் வென்றார்.

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவிற்கான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச்  ஆறாம் நிலை வீரரான ஆண்டி முர்ரே பலப்பரீட்சை நடத்தினார்கள்.

இருவரும் முன்னணி வீரர்கள் என்பதால் முதல் செட்டை கைப்பற்ற இருவரும் கடுமையான போராடினார்கள். இதனால் முதல் செட் பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் ஜோகேவிச் 7-6 (5) என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இதனால் 2வது செட்டில் முர்ரே ஆக்ரோஷமாக விளையாடினார். இதனால் இந்த செட்டும் டை பிரேக்கர் வரை சென்றது. இதில் முர்ரே 7(4)-6 எனக் கைப்பற்றினார்.

3வது செட்டை ஜோகோவிச் 6-3 என எளிதில் கைப்பற்றினார். முதல் 3 செட்டில் 2-1 ஜோகோவிச் முன்னிலை பெற்றதால் 4வது செட்டை கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று அவர் ஆக்ரோஷமாக விளையாடினார்.

இதற்கு ஆண்டி முர்ரேவால் எதிர் தாக்குதல் தொடுக்க முடியவில்லை. அதனால் ஜோகோவிச் இந்த செட்டை 6-0 என எளிதில் வென்று 3-1 என அவுஸ்திரேலிய கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்றார்.

இந்த வெற்றியின் மூலம், நான்கு தடவைகள் அவுஸ்திரேலிய பகிரங்க சுற்றுத்தொடரின் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்த ரொஜர் பெடரர், அன்ட்ரே அகாஸி ஆகியோரது சாதனைகளை ஜொக்கோவிக் முறியடித்துள்ளார்.

மொத்தமாக நான்கு தடவைகள் அவுஸ்திரேலிய பகிரங்க சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டிகளுக்குத் தெரிவாகி, வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட வீரராக அன்டி முரே மாறியுள்ளார்.

அவுஸ்ரேலியாஆடவர்ஆட்டம்ஆறாம்இறுதிஉலகம்ஒற்றையர்ஓபன்கிராண்ட்சிலாம்செர்பியாநிலைநோவக்பட்டம்பிரிவுபோட்டி
Comments (0)
Add Comment