ஆசிய பெண்களுக்கான ஹோக்கி கோப்பையை வென்றது இந்தியா!

பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் சிங்கப்பூரில் தொடங்கியது. லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகள் முடிவில் இந்தியா மற்றும் சீனா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சாம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய பெண்கள் அணி 2-1 என சீன அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

ஒரு கட்டத்தில் 1-1 என ஸ்கோர் சமநிலையில் இருந்தது. ஆட்டம் முடிவடைவதற்கான கடைசி நிமிடத்தில் இந்திய வீராங்கனை தீபிகா கோல் அடிக்க இந்தியா 2-1 என சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

ஆண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில்   பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

அணிகள்ஆசியாஇந்தியாசாம்பியன்பெண்கள்வெற்றி
Comments (0)
Add Comment