யாழ். பல்கலைக்கழகத்தின் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் காணப்படும் துஸ்பிரயோகங்கள் மற்றும் மோசடிகள் குறித்து, யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம் திடுக்கிடும் தகவல்களினை வெளியிட்டுள்ளது. கல்விசார் நேர்மைக்கான உபகுழுவொன்றை அமைத்து ஆசிரியர் சங்கம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையினில் இத்தகவல்களை அது அம்பலப்படுத்தியுள்ளது.
குறிப்பாக நியமனங்களினில் ஈபிடிபியின் நேரடி தலையீடு மற்றும் அரச ஆதரவு பேரவை உறுப்பினர்களது அடாவடிகள் தலையீடுகள் என்பவற்றை விஞ்ஞான ஆசிரியர் சங்கம் அம்பலப்படுத்தியுள்ளது.
துரதிருஸ்டவசமாக பேரவையின் உள்வாரி உறுப்பினர்களும் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் விட, மிகச்சில உறுப்பினர்களே சட்ட நியதிகளைத் தெரிந்தவர்களாகவோ அல்லது அதற்கு மதிப்பளிப்பவர்களாகவோ இருக்கும் நிலை காணப்படுகிறது. உள்வாரி உறுப்பினர்களின் பலம் வாய்ந்த ஒரு குழுவினருக்கு இது வாய்ப்பாகப் போக மற்றவர்கள் இவற்றைக் கண்டும் காணாமல் இருப்பதன் மூலம் பிரச்சினை இல்லாமல் வாழ எத்தனிக்கின்றனர். இவர்களுடன் சேர்ந்தியங்கும் கல்வியாளர்கள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில், விஷேடமாக கல்விசார் நியமனங்களில், எந்தக் கேள்வியுமில்லாத அதிகாரத்தை அனுபவிக்கின்றனர் எனவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையினில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு,
கல்விசார், கல்விசாரா ஊழியர்களின் தெரிவில், யாழ். பல்கலைக்கழகத்தின் பல துறைகளிலும், பிரிவுகளிலும் பரவலான துஷ்பிரயோகங்கள் நடைபெறுவதை சந்தேகத்திற்கு இடமில்லாதவகையில் இந்த உபகுழு கண்டறிந்துள்ளது. ஒருபுறம் எல்லா மட்டங்களிலும் காணப்படும் அரசியல் மற்றும் தனிப்பட்ட போஸிப்பும், மறுபுறம் பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளின் கேள்வி கேட்கத் துணியாத மனப்பாங்குமே இந்தத் துஸ்பிரயோகங்களின் ஆணிவேராக உள்ளது.
ஆவணப்படுத்தப்பட்ட பரவலான துஸ்பிரயோகம் தகுதிகாண் விரிவுரையாளர்களின் தெரிவில் காணப்படுகிறது. முதலாம்வகுப்புச் சித்தி போன்ற அதி உயர் தகைமை பெற்ற வேட்பாளர்கள் திட்டமிடப்பட்ட முறையில் ஓரங்கட்டப்பட்டு பதவி வழங்கப்படுவது மறுக்கப்படுவதில் இது முடிவடைகிறது.
பேரவை உறுப்பினர் நியமனங்களில் அரசியலைக் கலப்பதன் மூலமும, பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்காணிக்க வேண்டிய தனது சட்ட ரீதியான கடமையைச் செய்யாதிருப்பதன் மூலமும் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவும் இந்த துஸ்பிரயோகங்களுக்கு ஒரு கருவியாகிறது.அரசியல் தொடர்பும் பேரவைக்கு முன் நடத்தப்படும் கூட்டங்களும்
பல்கலைக் கழகத்தை ஆளும் பேரவையினர், முக்கியமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (இந்த விடயத்தில் இக்;குழுவானது அரசியல் அதிகாரத்தில் உள்ளோரின் விருப்பத்தை செயற்படுத்தும் ஒன்றாகவே உள்ளது) நியமிக்கப்படும் வெளிவாரி உறுப்பினர்களில் பெரும்பாலானோர், கோட்பாட்டின் அடிப்படையிலோ அல்லது பல்கலைக் கழகத்தின் உண்மையான நலன் கருதியோ செயற்பட மனமில்லாதவர்களாக இருக்கின்றனர். துணைவேந்தரின் தெரிவு பெருமளவிற்கு இவர்களிலேயே தங்கியுள்ளது. சட்டப்படி பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கே வெளிவாரி உறுப்பினர்களை நியமிக்கும் பொறுப்பு உள்ள போதிலும் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ள ஒரு கட்சிக்கே இதற்கான ஏகபோக உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேரவைக்கும் முன் இவ்வுறுப்பினர்களுக்கு ஒரு கூட்டத்தை தனது அலுவலகத்தில் நடத்துவதன் மூலம் அவர்களின் செயற்பாடுகளுக்கு ஒரு இறுக்கமான கட்டுப்பாட்டை இக் கட்சி ஏற்படுத்தி உள்ளது.
துரதிருஸ்டவசமாக பேரவையின் உள்வாரி உறுப்பினர்களும் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் விட, மிகச்சில உறுப்பினர்களே சட்ட நியதிகளைத் தெரிந்தவர்களாகவோ அல்லது அதற்கு மதிப்பளிப்பவர்களாகவோ இருக்கும் நிலை காணப்படுகிறது. உள்வாரி உறுப்பினர்களின் பலம் வாய்ந்த ஒரு குழுவினருக்கு இது வாய்ப்பாகப் போக மற்றவர்கள் இவற்றைக் கண்டும் காணாமல் இருப்பதன் மூலம் பிரச்சினை இல்லாமல் வாழ எத்தனிக்கின்றனர். இவர்களுடன் சேர்ந்தியங்கும் கல்வியாளர்கள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில், விஷேடமாக கல்விசார் நியமனங்களில், எந்தக் கேள்வியுமில்லாத அதிகாரத்தை அனுபவிக்கின்றனர்.
கல்விசார் நியமனங்களில் நெறிப்பிறள்வுகள்
விலங்கியல்
14 அக்டோபர் 2013 இல் நடைபெற்ற நேர்முகத் தேர்வொன்றில் சராசரித் தரப் புள்ளியாக (GPA) 4 இற்கு 3.72 பெற்று தனது அணியில் முதலாவதாக வந்த முதலாம் வகுப்புச் சித்தி பெற்ற பட்டதாரி ஒருவர் புறந்தள்ளப்பட்டுள்ளார். தேர்வுச் சபைக்கு வழங்கப்பட்ட அனுபந்தத்தில் இவர் பெற்ற விசேட பேறான விலங்கியலில் மிகச் சிறந்த ஆற்றுகைக்கான சேர் சங்கரப்பிள்ளை பரராஜசிங்கம் பரிசில் காரணம் ஏதுமில்லாமல் சேர்க்கப்படாமல் விடப்பட்டுள்ளது. நேர்முகப் பரீட்சைக்கு தோற்றிய பதினொருவரில் மிகவும் தரம் குறைந்தவர் என்று சொல்லக் கூடிய, சராசரித் தரப் புள்ளியாக 3.44 பெற்று இரண்டாம் வகுப்பு மேற்பிரிவில் சித்தியடைந்தவருக்கே நியமனம் வழங்கப்பட்டது.
நேர்முகத் தேர்வின்போது முதலாம் வகுப்பு வேட்பாளரின் அளிக்கையை இரண்டு நிமிடத்தில் நிறுத்திய துணைவேந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு வேண்டிய நேரம் வழங்கினார்.
கணிணி விஞ்ஞானம்
சராசரித் தரப் புள்ளி (GPA) 3.80 வரை கொண்டிருந்த நான்கு முதலாம் வகுப்பு விண்ணப்பதாரிகள் 8 மே 2012 இல் தகுதிகாண் விரிவுரையாளர் பதவிக்கான நேர்முகத்திற்கு தோற்றினர். எனினும் இவர்களின் அளிக்கைத்திறன், பாட அறிவு என்பவற்றுடன்; பொதுவான ஆற்றுகையும் திருப்தியற்றவை எனக் கூறி தெரிவுச் சபை எவரையும் தெரிவு செய்யவில்லை. அடுத்த தடவைக்கு இவர்கள் விண்ணப்பிக்கவுமில்லை.
அடுத்து 12 நவம்பர் 2013 இல் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் குறிப்பிடத்தக்கதான மேம்பட்ட கல்வித் தகைமைகள் அடையாமல் கணிணிப் பிரிவில் (கணிணி விஞ்ஞானத் துறையில் அல்ல) உதவி வலையமைப்பு முகாமையாளர் தரம் II இல் ஒன்பது வருடங்கள் கடமையாற்றிய 2001 இல் இரண்டாம் வகுப்பு மேற்பிரிவு பட்டம் பெற்ற ஒருவரே தெரிந்தெடுக்கப்பட்டார்.
எவ்வாறு புதிய முதலாம் வகுப்புப் பட்டதாரிகளுக்கு பாட அறிவு இல்லாமலுள்ளது என்பது விடை தெரியாத ஒரு கேள்வியாகும்.
மிகத் திறமை வாய்ந்த முதலாம் வகுப்புப் பட்டதாரிகளைத் துரத்தி, ஏற்கப்பட்டிருக்க வேண்டிய சிறந்த விண்ணப்பதாரிகளை அகற்றிய பின்னர் தந்திரமாக இவர் உள்வாங்கப்பட்டுள்ளார் என்பதையே சந்தர்ப்ப சூழ்நிலைகள் சுட்டிக் காட்டுகின்றன.
பொறியியல் பீடம்
பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு 1982 இல் அனுமதிக்கப்பட்டு மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் 2008 இல் கலாநிதிப் பட்டம் பெற்ற ஒரு பொறியியலாளர்; சிரேஸ்ட விரிவுரையாளர் தரம் ஐ இற்கு வேண்டப்படு;ம் பட்டப்பின் தகைமைக்கு பின்னரான 6 வருட அனுபவம் இல்லாத நிலையில் சிரேஸ்ட விரிவுரையாளர் தரம் ஐ இற்கு நியமிக்கப்பட்டார்.
மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு 1981 இல் அனுமதி பெற்று 1983 வன்முறையின் பின் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வியைப் ப+ர்த்தி செய்து, கரையோர பொறியியல் துறையில் பெயர் பெற்ற கனடாவின் குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் 1995 இல் கரையோர பொறியியல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற இன்னொரு பொறியியலாளர் இரண்டு தடவைகள் விண்ணப்பித்து இரண்டு தடவையும் நிராகரிக்கப்பட்டார். இந்தப் பதவிக்கு வேண்டிய கலாநிதிப் பட்டத்தின் பின் கொண்டிருக்க வேண்டிய அனுபவங்களையும் மேலும் தேவைப்படும் எல்லா தகுதிகளையும் இவர் போதிய அளவு கொண்டுள்ளார். இரண்டாவது தடவையின்போது தெரிவுச் சபையானது இவரின் பாடஅறிவு, கற்பித்தல் திறன், ஆய்வு ஆற்றல் என்பனவற்றுடன் இவரின் பொதுவான ஆற்றுகையும் திருப்தியற்றவை எனக் கூறியது. ஆனால் நிராகரிக்கப்பட்ட இந்தப் பொறியியலாளர் புலமை வாய்ந்த நடுவர்களால் தரம் பேணப்படும் விஞ்ஞான சஞ்சிகைகளில் மூன்று கட்டுரைகள் எழுதியுள்ளார். இதனை சமன் செய்யத்தக்க வகையில் தெரிவு செய்யப்பட்ட பொறியியலாளரிடம் இருப்பது குறைவானதே.
சமூகவியல்
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதலாம் வகுப்புப் பட்டம் பெற்று, உலகப் பல்கலைக் கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் மதிக்கப்படும் அமெரிக்காவின் ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக் கழகத்தில் மானிடவியல் (anthropology) துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற ஒருவர் யாழ். பல்கலைக் கழகத்தின் சமூகவியல் துறையில் கல்விசார் பதவிக்கு விண்ணப்பித்தார். நேர்முகப் பரீட்சைக்கு தகுதியானவர்களைக் காட்டும் சுருக்கமான அட்டவணையில் இவரின் பெயர் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் சமூகவியலில் கலாநிதிப் பட்டமே இப் பதவிக்குத் தேவைப்படுகிறது என சிரேஸ்ட உதவிப் பதிவாளரினால் குறிப்பு எழுதப்பட்டது. அத்துடன் இவர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படவில்லை.
ஆனால் பாடத்துடன் தொடர்புள்ள கல்விப் பிரிவொன்றில் வேண்டப்படும் தகைமையைக் கொண்டவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட வேண்டும்; தெரிவுச் சபையே நியமனம் தொடர்பான முடிவினை எடுக்க வேண்டும் என்பதே விதிமுறையாகும். உண்மையில் சமூகவியலையும் மானிடவியலையும் பிரித்துக் காட்டுவதென்பது மிகவும் கடினமான காரியமாகும்.
ஆங்கிலமொழி கற்பித்தல்
ஆங்கில இலக்கியத் துறையில் 1½ வருடங்கள் தற்காலிக விரிவுரையாளராகக் கடமையாற்றிய பேராதனைப் பல்கலைக்கழக முதலாம் வகுப்பு விண்ணப்பதாரி ஆங்கிலமொழி கற்பித்தல் பிரிவில் ஒரு பதவிக்கு அக்டோபர் 2010 இல் விண்ணப்பித்தார். அவர் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற ஆகஸ்ட் 2011 இற்கு இரண்டு மாதங்களுக்குப் பின்பு (அதாவது விண்ணப்பித்து ஒரு வருடத்தின் பின்) நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இணையத்தின் மூலம் தனக்கு நேர்முகத் தேர்வு நடத்தும்படி அவர் விடுத்த வேண்டுகோள் ஏற்கப்படவில்லை.
அடுத்த தடவை அவர் விண்ணப்பித்த போது நேர்முகத்தேர்வு 17 ஏப்ரல் 2012 இற்கு நிர்ணயிக்கப்பட்டது. அது அவருடைய பல்கலைக் கழகத்தில் கல்விச் செயற்பாட்டுக் காலமாக இருந்ததைக் காரணம் காட்டிநேர்முகத் தேர்வை ஒரு மாதம் பிற்போடும்படி அவரால் விடுக்கப்பட்ட வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.
அதே 17 ஏப்ரல் அன்று சட்டத்துறைக்கும் நேர்முகத்தேர்வு நடைபெற்றது. ஆங்கில மொழி, சட்டம் ஆகிய இரண்டு பாடங்களுக்கும் முதலாம் வகை (முதலாம் வகுப்பு அல்லது இரண்டாம் வகுப்பில் மேற் பிரிவுச் சித்தி) வேட்பாளர்கள் வருகை தரவில்லை. இதனால் இரண்டாம் வகை (இரண்டாம் வகுப்பில் கீழ் பிரிவுச் சித்தி) வேட்பாளர்கள் மே 15 அன்று நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். ஆங்கில மொழிக்கு ஒரு இரண்டாம் வகுப்பு கீழப்; பிரிவு பட்டதாரி தெரிவு செய்யப்பட்டார். சட்டத்துறைக்கு விண்ணப்பித்த இரு இரண்டாம் வகை விண்ணப்பதாரிகளில் ஒருவர் அன்று சமூகமாகி இருந்தார். ஆனால் நேர்முகத்தேர்வு பிற்போடப்பட்டுள்ளதாக அவருக்கு அறிவிக்கப்பட்டது. இந்த சட்டத்துறைக்கான நேர்முகத்தேர்வு மே 24 அன்று நடைபெற்றது. அதில் மே 15 அன்று சமூகமளிக்காமல் மே 24 அன்று சமூகமளித்த இரண்டாம் வகுப்பு கீழப்; பிரிவு பட்டதாரி தெரிவு செய்யப்பட்டார். இந்த நாளில் நேர்முகத்தேர்வை பிற்போடுமாறு விண்ணப்பித்த ஆங்கிலத்தில் முதலாம் வகுப்புப் பெற்ற வேட்பாளர் யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்துவிட்டார். ஆனால் நேர்முகத்தேர்வை பிற்போடுமாறு கேட்ட அவரின் விண்ணப்பம் ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்பட்டுவிட்டது; சட்டத்துறையில் இதற்கு நேர்மாறான நிகழ்வு நடந்துள்ளது.
ஆங்கில மொழி கற்பித்தல் பிரிவில் பதவிக்கான விண்ணப்பம் மீண்டும் ஏப்ரல் 2013 இல் கோரப்பட்டு நேர்முகத்தேர்வு அக்டோபர் 2013 இல் நடைபெற்றது. அமெரிக்காவில் கலாநிதிப் பட்ட ஆய்வை மேற்கொள்ளும், மேற்கூறிய ஆங்கில முதலாம் வகுப்புப் பட்டதாரி தனது நேர்முகத்தேர்வை இணையம் மூலம் நடத்தும்படி விடுத்த வேண்டுகோள் ஏற்கப்படவில்லை. தெரிவுச் சபைக்கு வழங்கப்பட்ட அனுபந்தத்தில் அவர் தனது விண்ணப்பத்தில் பட்டியலிட்டுக் காட்டிய பல்கலைக்கழக பரிசில்கள் குறிக்கப்பட்டிருக்கவில்லை. இதே நேர்முகத்தேர்வுக்குத் தோற்றிய யாழ். பல்கலைக்கழக முதலாம் வகுப்புப் பட்டதாரியும் நிராகரிக்கப்பட்டார். இரண்டாம் வகுப்பு மேற் பிரிவுவில் சித்தியடைந்த மூன்று விண்ணப்பதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது.
நிதி முகாமைத்துவம்
சராசரித் தரப் புள்ளி (GPA) 3.63 உடன் பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தங்கப் பதக்கத்தையும் வென்றவரான ஒரு முதலாம் வகுப்புப் பட்டதாரி நிராகரிக்கப்பட்டு 3.49 புPயு இனைக் கொண்ட ஒருவர் தெரிவு செய்யப்பட்டார். தெரிவுச் சபைக்கு வழங்கப்பட்ட அனுபந்தத்தில் முதலாவது விண்ணப்பதாரியின் தங்கப் பதக்கம் பற்றிய தகவல்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரி ஏப்ரல் 2012 இலிருந்து தற்காலிக விரிவுரையாளராக கடமையாற்றியதாக தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் இவர் மே 2013 இற்கு முன்னர் அப் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கவில்லை.
நிராகரிக்கப்பட்ட முன்னணி விண்ணப்பதாரி பேரவைக்கு அனுப்பியிருந்த முறைப்பாட்டில் தெரிவுக்குழுவின் தலைவர் (துணைவேந்தர்) நேர்முகத் தேர்வின் பெரும்பாலான நேரத்தில் அங்கு இருக்கவில்லை என்றும் ஆனால் தெரிவுப் பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இவ் விண்ணப்பதாரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார்.
வர்த்தகம்
19 பெப்ரவரி 2014 இல் நடந்த நேர்முகத் தேர்வுக்கு சராசரி தரப் புள்ளியாக (புPயு) 3.63 பெற்ற டீடீயு முதலாம் வகுப்புப் பட்டதாரியும் மேலும் சில டீடீயு பட்டதாரிகளும் அழைக்கப்படவில்லை. வியாபார முகாமைத்துவம் வர்த்தகத்துடன் தொடர்புபட்ட துறை என்ற வகையில் இது விதிகளுக்கு முரணானது. நேர்முகத் தேர்வில் புPயு 3.55 வரை பெற்ற மூன்று முதலாம் வகுப்புப் பட்டதாரிகள்; நிராகரிக்கப்பட்டனர். புPயு 3.19 பெற்ற 2012 ஆம் ஆண்டு அணியின் இரண்டாம் வகுப்பு மேற்பிரிவு பட்டதாரி ஒருவரும் 2000 ஆம் ஆண்டில் இரண்டாம் வகுப்பு மேற்பிரிவு பட்டம் பெற்று 2009 இல் யாழ். பல்கலைக் கழகத்தில் திட்டமிடலில் ஆயு பட்டம் பெற்றவர் ஒருவரும் தெரிவு செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.
விளையாட்டு விஞ்ஞானம்: விருப்பத்துக்குரிய விண்ணப்பதாரியின் கதை
யாழ். பல்கலைக்கழக உடற் பயிற்சி அலகில் பணியாற்றும் உடற் கல்வியில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதலாம் வகுப்பு முதுமாணிப் பட்டம் பெற்ற ஒருவரும், பாடசாலை ஒன்றில் விளையாட்டு ஆசிரியராக நான்கு வருடங்களாகப் பணிசெய்த வேறொரு இந்தியப் பல்கலைக்கழகத்தின்; இரண்டாம் வகுப்பு முதுமாணிப் படடதாரியும் விளையாட்டு விஞ்ஞானத்தில் விரிவுரையாளர் பதவிக்கு 30 மார்ச் 2012 இல் தோற்றினர். எவரும் தெரிவு செய்யப்படவில்லை. ஆனால் இரண்டு வாரங்களின் பின், கல்வியாண்டு முடிவடையும் தருணத்தில், இந்த இரண்டாம் வகுப்பு முதுமாணிப் படடதாரியை தற்காலிக விரிவுரையாளராக வழமைக்கு மாறாக துணைவேந்தர் நியமித்தார்.
அடுத்த தடவை விண்ணப்பங்கள் கோரப்பட்ட போது இவ்விருவரும் விண்ணப்பித்தனர். நேர்முகப் பரீட்சை நாளில்,நேர்முகப் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், மதியம் 12 மணிக்குத்தான் முதலாம் வகுப்பு பட்டதாரி சிரேஸ்ட உதவிப் பதிவாளரினால் அழைக்கப்பட்டு நேர்முகப் பரீட்சை பற்றி அறிவுறுத்தப்பட்டார். நேர்முகப் பரீட்சைக்கு ஆயத்தப்படுத்த அவருக்கு அவகாசம் வழங்கப்படவில்லை. இரண்டாம் வகுப்புப் படடதாரி தெரிவு செய்யப்பட்டார். இந்த முறைகேடுகளை முதலாம் வகுப்பு பட்டதாரி எழுத்துமூலம் சுட்டிக்காட்டிய பின் துணைவேந்தர் அந் நியமனத்தை இரத்துச் செய்தார். பின்னர் இவ்விரு விண்ணப்பதாரிகளும் வேறு சிலரும் 10 அக்டோபர் 2013 இல் மீண்டும் நேர்முகத் தேர்வுக்குத் தோற்றிய போதிலும் அனைவருமே தகுதியற்றவர்களென முடிவெடுக்கப்பட்டது. தெரிவுச் சபையின் இந்த திடீர் மாற்றங்களை எப்படி விளக்குவது?
கல்விநடவடிக்கைசாரா நியமனங்கள்
• CAA பதவிக்கான மார்ச் 2009 நியமன பட்டியல் பெரும்பாலும் epdp பட்டியலிலிருந்தே தயாரிக்கப்பட்டது. இப் பட்டியலின் முதல் பக்கமாக பொது விளம்பரம் மூலமே தெரிவுகள் மேற்கொள்ளப்படும் என்று கூறும் ஆட்சேர்ப்புக்கான வரைபு (ளஉhநஅந ழக சநஉசரவைஅநவெ) இணைக்கப்பட்டிருந்தது.
• ஜூன் 2011 இல் தெரிவு செய்யப்பட்ட ஊயுயு இனரின் நியமனம் பிற்போடப்பட்டது. ஆனாலும் நடைமுறைகள் சரியாகவே பின்பற்றப்பட்டதாக பேரவை பதிவு செய்தது. பின்னர் உயர் கல்வி அமைச்சின் செயலாளரின் கடிதத்தினால் இந் நியமனங்கள் முடிவின்றிப் பிற்போடப்பட்டன.
• ஊழியர் பதவிக்கான வேட்பாளர்களின் பட்டியலொன்றை உயர் கல்வி அமைச்சு அனுப்பியதைத் தொடர்ந்து 19 ஜூலை 2013 இற்கு முன் விண்ணப்பங்களை ப+ர்த்தி செய்யும்படி பட்டியலிலிருந்தோருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதற்கிடையில் பட்டியலிலிருந்து 30 பெயர்களை நீக்கி தான் புதிதாக அனுப்பும் 23 பெயர்களை சேரக்கும்படிஜூலை 8 அன்றுஉயர் கல்வி அமைச்சிலிருந்து தொலைபேசி அறிவித்தலொன்று விடுக்கப்பட்டது. தெரிவுச் சபைக்கு வழங்க வேண்டிய அனுபந்தம் ஒரு சாதனை என்று கருதக்கூடிய வகையில், மிகக் குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டு ஜூலை 10 ஆம் திகதி நேர்முகத் தேர்வு நடாத்தப்பட்டது. வருகை தராத ஐந்து பேருக்கும், வராமலே தேர்வில் தன்னை கருத்தில் எடுக்கும்படி வேண்டிய ஒருவருக்கும் அடுத்த நாள் நேர்முகத் தேர்வு நடாத்தப்பட்டது. இத் தெரிவுகள் அன்றே (11ஆம் திகதி) ஒரு விசேட பேரவையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
பரிந்துரைகள்
1. நேர்முகத் தேர்வில் புறந்தள்ளப்பட்ட உயர் தகுதி வாய்ந்த எல்லா விண்ணப்பதாரிகளும் அழைக்கப்பட்டு முறைகேடுகள் நடைபெற்ற எல்லா தெரிவுகளையும் உடனடியாக மீளாய்வு செய்ய வேண்டும். பழிவாங்கலிலிருந்து முறைப்பாட்டாளர்களைப் பாதுகாப்பதற்காக அவர்களின் முறைப்பாடுகள் யாவும் தொழிற் சங்கங்களின் ஆலோசனையுடன் நியமிக்கப்படும் விஷேட மீளாய்வுச் சபையிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
2. பல்கலைக் கழகத்தின் பெறுமதியை சரியாக உணர்ந்துள்ள, சமூகத்தில் நன்மதிப்புப் பெற்ற, எவரையும் சார்ந்திராதவர்களே பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும். பல்கலைக் கழகத்தின் கல்வியாளர்களும், மாணவர்களின் பிரதிநிதிகளும் இவர்களின் தகுதியை மதிப்பாய்வு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். உள்வாரி உறுப்பினர்கள் தமது உறுப்பினர் பதவிகளைத் துறந்து தத்தமது பீடங்களிலிருந்து புதிய ஆணையைப் பெறல் வேண்டும் வெளிப்படையாகப் பேசுவதற்கு உள்ளார்ந்த தடையுணர்வு எதையும் கொண்டிராத சுதந்திரமான உள்வாரி உறுப்பினர்களுடன் ஒரு புதிய ஆரம்பத்தை தொடங்க இது வழிகோலும். அரசியல் தலையீடுகளுக்கு எதிராகவும், அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிராகவும் குரலெnழுப்புவதற்கான ஆணையை புதிய உள்வாரி உறுப்பினர்கள் கொண்டிருத்தல் வேண்டும்.