அவரது உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டதை அடுத்து, இந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தனிப்படையில் இருந்த கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் வைத்திருந்த துப்பாக்கி குண்டு தான் பெரிய பாண்டியன் உடலில் இருந்ததாக பாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறினார்.
சம்பவ இடத்தில் சென்னை காவல்துறை இணை ஆணையர் சந்தோஷ் குமார் விசாரணை நடத்தி இருந்தார். இதனையடுத்து, முனிசேகர் மற்றும் தனிப்படையில் இருந்த மற்ற இரு போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முனிசேகர் மீது 104 ஏ பிரிவின் கீழ் ராஜஸ்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முனிசேகர் தான் பெரிய பாண்டியனை தவறுதலாக சுட்டார் என்று எப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளதாகவும், அஜாக்கிரதையாக செயல்பட்டதாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.