இங்கிலாந்து – இலங்கை கிரிகட் தொடரின் இறுதி ஆட்டம்

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி தற்போது உள்ளூர் அணியான எசெக்ஸ் அணியுடன் பயிற்சிப் போட்டியில் ஆடி வருகிறது.

3 நாட்களை கொண்ட இந்த பயிற்சிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 254 ஓட்டங்களை குவித்தது. அந்த அணி சார்பில், குஷால் மெண்டிஸ் அதிக பட்சமாக 60 ஓட்டங்கள் எடுத்தார். அதேபோல் டிக்வெல்ல 53 ஓட்டங்களும், மேத்யூஸ் 30 ஓட்டங்களும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய எசெக்ஸ் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 81 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 2வது நாளில் தொடர்ந்து ஆடிய அந்த அணி 100 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 412 ஓட்டங்கள் குவித்திருந்த போது டிக்ளேர் செய்தது. அந்த அணியில் மைக்கேல்பர்க் (109), வெஸ்ட்லி (108) இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

தவிர, போபரா (87), லாரன்ஸ் (57) ஆகியோரும் தங்கள் பங்கிற்கு அரைசதம் விளாச அந்த அணி இமாலய ஓட்டங்களை குவித்தது. இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் எவ்வளவு முயன்று அந்த அணியின் துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. தமிங்க பிரசாத் அதிகபட்சமாக 2 விக்கெட் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணிக்கு கெளஷால் சில்வா (7), குஷால் மெண்டிஸ் (16) ஏமாற்றினர். நேற்றைய ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்கு 42 ஓட்டங்கள் குவித்துள்ளது.தொடக்க வீரரான கருணாரத்னே (16) ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இன்று ஒருநாள் மட்டும் மீதமிருப்பதால் இந்த பயிற்சிப் போட்டி டிராவில் முடிய வாய்ப்புள்ளது

அணிஇங்கிலாந்துஇலங்கைகிரிகட்சுற்றுப்பயணம்தொடர்பயிற்சி
Comments (0)
Add Comment