இந்தியாவுடன் ஒருநாள் போட்டியில் விளையாட இலங்கை அணி சம்மதித்துள்ளது

மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை கைவிட இந்தியாவுடன் ஒருநாள் போட்டியில் விளையாட இலங்கை அணி சம்மதித்தது.

ஆனால் தற்போது இதற்கு கைமாறு கேட்கிறது. அதாவது, சர்வதேச அட்டவணைப்படி இலங்கை அணி அடுத்த ஆண்டு ஆகஸ்டில் இந்திய மண்ணில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும்.

இந்தப்போட்டிகளை இலங்கையில் நடந்த விரும்புகிறது. இதன் மூலம், இலங்கை அணி நிர்வாகத்திற்கு ரூ. 49 கோடி வருமானம் கிடைக்கும். தற்போது இது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ தற்போது இந்தியாவில் ஐந்து ஒருநாள் போட்டிகளை விளையாடுவதை உறுதி செய்துவிட்டோம்.

இரு அணிகள் அடுத்த ஆண்டு 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது பற்றிய பேச்சுவார்த்தை தொடக்க நிலையில்தான் உள்ளது. இந்தப் போட்டிகளை எங்கள் நாட்டில் நடத்தலாம் என்ற எண்ணத்தில் உள்ளோம்,’’என்று கூறியுள்ளார்.

இதற்கு பி.சி.சி.ஐ., தரப்பில் எவ்வித பதிலும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் இது குறித்து நாளை நடக்கவுள்ள பி.சி.சி.ஐ., செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம்.

அட்டவணைஅதிகாரிஆகஸ்ட்இந்தியாஇலங்கை சர்வதேசம்கிரிக்கெட் வாரியம்செயற்குழுடெஸ்ட்பி.சி.சி.ஐபோட்டிமேற்கிந்திய தீவுகள்வருமானம்
Comments (0)
Add Comment