இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இன்று பலப்பரீட்சை!

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் இன்று போட்டியில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடரின் 9 ஆவது லீக் போட்டியாக நடைபெறவுள்ள இப்போட்டி இந்திய அணிக்கு ஒரு பயிற்சிப் போட்டியாகவே அமையும்.

இந்திய அணியை பொறுத்த வரையில் இது வரை எதிர்கொண்ட மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரின் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது. எனினும் ஐக்கிய அரபு எமிரேட்சை பொறுத்த வரையில் மூன்று போட்டிகளை எதிர்கொண்டு மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய கிண்ணம்இந்தியாஐக்கிய அரபு எமிரேட்ஸ்கிரிக்கெட்விளையாட்டு
Comments (0)
Add Comment