இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் 197 ரன் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடந்த 2-வது டெஸ்டில் 174 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று இந்தூரில் உள்ள ஹோல்சர் மைதானத்தில் தொடங்கியது.
காயம் காரணமாக விலகிய இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவானுக்கு பதிலாக கவுதம் காம்பீருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 2 ஆண்டுக்கு பிறகு அவர் களம் இறங்கி உள்ளார். காயத்தால் விலகிய புவனேஸ்குமாருக்கு பதில் உமேஷ்யாதவ் சேர்க்கப்பட்டார். உடல்நல குறைவால் 2-வது டெஸ்டில் விளையாட நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் அணிக்கு திரும்பினார் . நிகோஸ் நீக்கப்பட்டார். வாக்னருக்கு பதிலாக ஜேம்ஸ் நீசம் இடம் பெற்றார். டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் வீராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இத்தொடரில் 3 போட்டியிலும் வீராட்கோலியே டாஸ் ஜெயித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா 4 பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கியது. இந்தியா: கோலி (கேப்டன்), முரளி விஜய், கவுதம் காம்பீர், புஜாரா, ரகானே, ரோகித் சர்மா, சகா, அஸ்வின், ஜடேஜா, முகமது சமி, உமேஷ்யாதவ். நியூசிலாந்து: வில்லியம் சன் (கேப்டன்) டாம்பதம், மார்ட்டின் குப்தில், ரோஸ் டெஸ்சர், ரோஞ்சி, நீசம், சான்னெர், வாட்சிங், ஜிதன் பட்டேல், மெட் ஹென்சி, போல்ட். தொடக்க வீரர்களாக முரளிவிஜய், கவுதம் காம்பீர் களம் இறங்கினர். இருவரும் நிதானத்துடன் ஆட்டத்தை தொடங்கினர்.