இந்தியா– பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன

5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது.

தகுதி சுற்று ஆட்டத்தில் இருந்து வங்காளதேச அணி சூப்பர் 10 சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு அணி எது என்பது இன்று தெரியும்.

சூப்பர்–10 சுற்று இன்று தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இந்தியா– பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகள் மோதும் ஆட்டங்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக இருக்கும். இதனால் இந்த ஆட்டம் அதிக முக்கியத்துவம் பெற்று உள்ளது.

மேலும் சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதற்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் இந்தியா அணி பாகிஸ்தானிடம் தோற்றது கிடையாது. இதனால் இந்த பெருமையை தக்க வைத்து கொள்ள இந்தியா கடுமையாக போராடும்.

இந்திய அணி பேட்டிங்கில் கேப்டன் டோனி, விராட் கோலி, ரெய்னா, யுவராஜ்சிங் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். தொடக்க வீரர்கள் ஷிகர் தவான், ரோகித் சர்மா ரன்களை குவிப்பது அவசியம். சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா ஆகியோர் சிறப்பாக பந்து வீசினாலும் வேகபந்து வீரர்களும் தங்களை பங்களிப்பை அளிப்பது முக்கியம்.

பாகிஸ்தான் அணியில் கம்ரன் அஜ்மல், முகமது ஹபீஸ், உமர் அக்மல், அப்ரிடி போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள், உமர்குல், சயீம் அஜ்மல், தன்விர் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதனால் இந்தியா வெற்றி பெற முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

அணிகள்இந்தியாதுடுப்பாட்டபாக்கிஸ்தான்
Comments (0)
Add Comment