மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ள நெஸ்ட்லே, நேற்று நள்ளிரவு வெளியிட்ட அறிக்கையில்,
“எதிர்பாராத விதமாக, மேகி நூடுல்ஸ் குறித்த சமீபத்திய மேம்பாடுகளும், ஆதாரமற்ற கவலைகளும், வாடிக்கையாளர்களிடம் ஒரு குழப்பமான சூழலை உருவாக்கியுள்ளது. எனவே எங்கள் தயாரிப்பை திரும்பப்பெற நாங்கள் முடிவெடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.
மேலும், இந்த குழப்பமான சூழல் முடிவுற்ற பின், மீண்டும் நம்பிக்கையுடம் மேகி நூடுல்ஸ் சந்தைக்கு வரும் என்றும் அந்நிறுவனம் வாக்குறுதி அளித்துள்ளது. டெல்லியை அடுத்து–குஜராத், தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், மற்றும் உத்தரகாண்டிலும் மோனோசோடியம் குளூடாமேட் அதிகமாக இருப்பதால் மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டது. இந்த 4 மாநிலங்களும் மேகி நூடுல்சை திரும்பபெற வேண்டும் என்று நெஸ்ட்லே நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், நெஸ்ட்லே நிறுவனம் தனது மேகி நூடுல்ஸ் தயாரிப்பை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.