இந்திய அணி துடுப்பாட்டத்தில் பலவீனமாக இருக்கிறது – கங்குலி

சஞ்சு சாம்சன், சுரேஷ் ரெய்னா ஆகியோரின் வருகை இந்திய அணிக்கு புத்துணர்ச்சியையும், உத்வேகத்தையும் அளிக்கும் என கங்குலி கூறியுள்ளார். இந்திய அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதன் டெஸ்ட் தொடரில் படுதோல்வியடைந்ததைத் தொடரந்து, இன்று ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் விளையாடவுள்ளது. இந்திய அணி துடுப்பாட்டத்தில் பலவீனமாக இருக்கிறது. அதில் முன்னேற்றம் காண வேண்டும் என முன்னாள் அணித்தலைவர் கங்குலி கூறியுள்ளார்.

மேலும்,இந்த ஒருநாள் தொடர் பற்றி அவர் கூறுகையில், டெஸ்ட் தொடருக்கு பிறகு நமது அணியினருக்கு ஒரு வாரம் ஓய்வு கிடைத்தது. மீண்டும் ஒருங்கிணைந்து தங்களை தயார்படுத்திக் கொள்ள இந்த நேரம் போதுமானதாகும். இடையில் மிடில்செக்ஸ் அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்திலும் விளையாடினார்கள்.

அடுத்த 5 போட்டிகளின் முடிவு எப்படி அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்திய ஒருநாள் போட்டி அணிக்கு நிறைய பேர் குறிப்பாக அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, சஞ்சு சாம்சன் போன்றோர் வந்துள்ளனர்.

இவர்கள் புத்துணர்ச்சியையும், உத்வேகத்தையும் அளிப்பார்கள் என்று நம்புகிறேன். அதுதான் இப்போது இந்திய அணிக்கு தேவை. நமது அணியில் கவலைக்குரிய அம்சம் எதுவென்றால், தொடக்க வரிசை துடுப்பாட்டமும், வேகப்பந்து வீச்சும் தான். ஷிகர் தவானும், ரோஹித் ஷர்மாவும் லார்ட்ஸ் பயிற்சி ஆட்டத்தில் சோபிக்கவில்லை. ஆனால் அவர்கள் வெகுசீக்கிரம் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.

இந்திய அணியில் இன்னொரு கவலைக்குரிய விடயம் என்னவென்று பார்த்தால், கடந்த ஓராண்டில் எதிரணிகள் நமக்கு எதிராக பலமுறை 300 ஓட்டங்களுக்கு மேலாக குவித்துள்ளன. இங்குள்ள சூழலில் ஒரு அணி 300 ஓட்டங்களுக்கு மேல் குவித்து விட்டால், பெரும்பாலும் அது அந்த அணியின் வெற்றிக்கான அறிகுறியாகவே இருக்கும். எனவே பலவீனமான இந்த பகுதியில் இந்திய அணி முன்னேற்றம் காண வேண்டும். மொத்தத்தில் இங்கிலாந்து அதன் சொந்த மண்ணில் வலுவான அணியாகவே விளங்கும் என்று கூறியுள்ளார்.

அணிக்குஅளிக்கும்ஆகியோரின்இந்தியஉத்வேகத்தையும்எனகங்குலிகூறியுள்ளார்சஞ்சு சாம்சன்சுரேஷ் ரெய்னாபுத்துணர்ச்சியையும்வருகை
Comments (0)
Add Comment